சரத்குமார், ராதாரவியை நீக்கியது பழிவாங்கும் நடவடிக்கை: நடிகர் சங்கம் மீது ஜே.கே.ரித்தீஷ் பாய்ச்சல்…!!

Read Time:3 Minute, 55 Second

201612041212214568_sarathkumar-radharavi-dismissed-jk-rithish-condemn-to_secvpfநடிகர் சங்கத்திற்கு புதிய நிர்வாகம் பதவிக்கு வருவதற்கு உறுதுணையாக இருந்தவர் ஜே.கே.ரித்தீஷ். இவர் தேர்தலின்போது ஆற்றிய பணிகளால்தான் புதிய நிர்வாகமே பதவிக்கு வர காரணமாக இருந்தது. இதை நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷாலே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், புதிய நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கைகள் தனக்கு திருப்தி அளிக்கவில்லை என்று ஜே.கே.ரித்தீஷ் சமீபத்திய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, நடிகர் சங்கம் தேர்தல் வரைக்கும்தான் நம்முடைய போட்டியே தவிர, தேர்தலுக்கு பிறகு அனைவரும் நாம் நண்பர்களாகத்தான் இருக்க வேண்டும் என்று நான் தேர்தல் முடிந்த அன்றைக்கே சொன்னேன், அதைத்தான் இன்றைக்கும் சொல்கிறேன். சரத்குமார், ராதாரவி மீது வழக்கு போட்டுள்ளது, அவர்களை நீக்கியுள்ளது முழுக்க முழுக்க பழிவாங்கும் நடவடிக்கை. இதை யாரும் செய்யக்கூடாது.

நமக்குள் ஒரு பிரச்சினை என்றால் அவர்களை நேரடியாக கூப்பிட்டு நண்பர்களாக பேசி உட்கார்ந்து தீர்க்கவேண்டும். நம்மால் தீர்க்க முடியவில்லை என்றால்தான் கோர்ட்டுக்கு போகவேண்டும். ஊழல் குற்றம் சுமத்திக் கொண்டே இருந்தால் நிர்வாகம் நேர்மையாக இருக்காது, நாகரீகமாகவும் இருக்காது.

நடிகர் சங்கம் என்பது மக்கள் மத்தியில் ஒரு நல்ல மதிப்பை பெற்றிருக்கிறது. அந்த மதிப்பை கெடுத்துக் கொள்ளக்கூடாது என்பது என்னுடைய எண்ணம். ஒரு நல்ல நிர்வாகம் வரவேண்டும் என்று நினைத்துதான் அனைவரும் கஷ்டப்பட்டு உழைத்தோம். ஆனால், அவர்கள் இப்படி பழிவாங்குவார்கள் என்று எனக்கு அப்போது தெரியவில்லை.

நிர்வாகத்தில் இருப்பவர்களுக்கு ஒருத்தருக்கொருத்தர் பழிவாங்கும் எண்ணம் இருக்கக்கூடாது. பதவி இன்று வரும், இன்னும் இரண்டு வருடத்திற்கு பிறகு வேறொருவர் நிர்வாகத்துக்கு வருவார்கள். பொதுக்குழு கூட்டத்தில் புறக்கணிக்கப்பட்டவர்கள் என்ன பாவம் செய்தார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் என்ன தவறு செய்தார்கள். அவர்களை எதற்காக நீக்கினார்கள்.

நிர்வாகத்தின் பதவியில் வருபவர்களுக்கு ரொம்பவும் பொறுமை, தவறு செய்தால் மன்னிக்கக்கூடிய தன்மை இருக்கவேண்டும். தவறு செய்தவர்களை கூப்பிட்டு அவர்களுடைய தவறுகளை தட்டிக்கேட்கவேண்டும். எதற்கெடுத்தாலும் நீதிமன்றம் செல்வது நாகரீகமான செயல் அல்ல. சினிமாவுக்கும் இது நாகரீகம் கிடையாது. என்றைக்கு இந்த நிர்வாகம் பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கியதோ அன்று முதல் நான் அந்த நிர்வாகத்தின் எந்த கூட்டத்திலும் கலந்து கொண்டது கிடையாது என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்காவில் இசை விருந்தில் தீ விபத்து:பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு…!!
Next post கருப்பை பற்றி உங்களுக்குத் தெரியாத சில விஷயங்கள்….!!