கற்பழித்து கொல்லப்பட்ட பெண் மருத்துவர்: 35 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த நீதி…!!

Read Time:3 Minute, 0 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-6கனடா நாட்டில் பெண் மருத்துவர் ஒருவரை கற்பழித்து கொலை செய்த குற்றவாளிக்கு 35 ஆண்டுகளுக்கு பிறகு ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஓண்டாரியா மாகாணத்தை சேர்ந்த Robert Badgerow(23) என்ற இளம்பெண் கடந்த 1981ம் ஆண்டு Hamilton நகரில் மருத்துவ உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில், தனது பிறந்த நாள் நெருங்கி வருவதால் நண்பர்களுக்கு விருந்து கொடுக்க உணவகத்திற்கு சென்றுள்ளார்.

விருந்து நிகழ்ச்சி முடிந்த பிறகு வீட்டிற்கு காரில் திரும்பிய அவர் வீட்டிற்கு செல்லவே இல்லை.

மறுநாள் காலையில் சாலை ஓரமாக அவரது சடலம் மட்டும் மீட்கப்பட்டது. மேலும், அவர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.

சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த விசாரணைக்கு பிறகு அவரது உடலில் இருந்த ஆணின் விந்தணுவை சேகரித்த பொலிசார் Robert Badgerow என்ற நபரை 1998-ம் ஆண்டு கைது செய்தனர்.

ஆனால், ‘நாங்கள் இருவரும் நண்பர்கள். அவருடைய விருப்பத்துடன் மட்டுமே உறவு வைத்துக்கொண்டேன். இக்கொலைக்கும் எனக்கும் தொடர்பு இல்லை’ என அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2001-ம் ஆண்டு ராபர்ட் தான் கொலையாளி என உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவருக்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்துள்ளார்.

சிறையில் 11 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த பிறகு தன் மீதான குற்றத்தை எதிர்த்து ராபர்ட் மேல் முறையீடு செய்தார்.

பின்னர், அவரது வழக்கு 2010, 2011, 2014 என 4 முறை விசாரணைக்கு வந்துள்ளது.

இறுதியாக வந்த விசாரணையில் ராபர்ட் தான் குற்றவாளி என்பது எவ்வித சந்தேகமும் இன்றி நிரூபிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை அன்று ராபர்ட்டிற்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கனடா நாட்டு வரலாற்றில் ஒரு கொலை குற்றத்திற்காக ஒரே நபர் மீது 4 முறை மேல் முறையீடு விசாரணை நடைபெற்றது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரூ.16 கோடிக்கு கற்பை ஏலம் விட்ட மகள்: அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்…!!
Next post அப்பல்லோவில் அமைச்சரவை அவசர கூட்டம்…!!