பின்லாந்தில் உணவு விடுதி அருகே துப்பாகி சூடு: 3 பெண்கள் படுகொலை…!!

Read Time:1 Minute, 53 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-3பின்லாந்தில் பிரபல உணவு விடுதி அருகே மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு நகர மேயர் உள்ளிட்ட 3 பெண்களை கொலை செய்து விட்டு தப்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பின்லாந்தில் பிரபல உணவு விடுதி அருகே அமைந்துள்ள பாதசாரிகளுக்கான பகுதியில் குறித்த படுகொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் நகர மேயர் Tiina Wilen-Jappinen மற்றும் 2 ஊடகவியலாளர்கள் என 3 பேர் சம்பவயிடத்திலேயே குண்டடிப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். குறித்த விவகாரத்தில் உள்நோக்கத்துடன் இந்த கொலை சம்பவம் நடைபெற்றிருக்க வாய்ப்பு இல்லை என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இதனிடையே குறித்த கொலை வழக்கு தொடர்பாக 23 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரை கைது செய்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

படுகொலை செய்யப்பட்டுள்ள 3 பெண்கள் மீது பல முறை தலை மற்றும் கால் பகுதியில் சுடப்பட்டுள்ளதை பொலிஸ் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது. ஆனால் குறித்த படுகொலையின் நோக்கம் தொடர்பில் இதுவரை உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சென்னை அப்போலோவில் என்ன நடக்கிறது?
Next post ரூ.16 கோடிக்கு கற்பை ஏலம் விட்ட மகள்: அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்…!!