அப்பல்லோவில் அமைச்சரவை அவசர கூட்டம்…!!

Read Time:2 Minute, 48 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-1முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதை அடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க அப்பல்லோவில் அவசர அமைச்சரவை கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

சென்னை அப்பல்லோவில் சிகிச்சை பெற்றுவரும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

உடல்நலம் தேறி விரைவில் வீடு திரும்புவார் என்ற நிலையில் தற்போது மீண்டும் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக வந்த தகவல் ஒட்டுமொத்த தமிழகத்தையும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.

இதனால் அதிமுக தொண்டர்கள் திரளானோர் அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் குவிந்து வருகின்றனர். பெண்கள் கண்ணீருடன் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கலந்தாலிசிப்பதற்காக நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அவசர கூட்டம் நடைபெற்று வருகிறது.

மேலும் டிஜிபி ராஜேந்திரன் தலைமையில் ஏடிஜிபி திரிபாதி, உளவுத்துறை ஐஜி சத்தியமூர்த்தி ஆகியோர் தனியாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

மட்டுமின்றி மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து காவலர்களும் சீருடையில் காலை 7 மணிக்கு பணிக்குத் திரும்ப வேண்டும் என்று டிஜிபி ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதில் ஆணையர்கள், கண்காணிப்பாளர்கள், உளவுத்துறை மற்றும் பொருளாதாரக் குற்றப்பிரிவு ஆகியோர் கண்டிப்பாக பணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவியது, ஆனால் அது வதந்தி என்று அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி தமிழகம் மற்றும் தேசிய தலைவர் பெரும்பாலானோர் தங்கள் வாழ்த்துக்களையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கற்பழித்து கொல்லப்பட்ட பெண் மருத்துவர்: 35 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த நீதி…!!
Next post இது வேற்றுகிரகவாசிகளின் விண்கலமா? ஆச்சரியத்தில் மூழ்கிய பிரித்தானிய மக்கள்…!!