குளிர்காலத்தில் ஏற்படும் தலைமுடி பிரச்சனைகளைத் தடுக்கும் உணவுகள்…!!
குளிர்காலத்தில் ஏராளமான தலைமுடி பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே தலைமுடி பிரச்சனைகளை சந்திப்பதற்கு முன், அதற்கு முறையான பாதுகாப்புக்களை வழங்கினால், தலைமுடி பிரச்சனைகளைத் தடுக்கலாம்.
அதற்கு தலைமுடி பராமரிப்பு பொருட்களைப் பயன்படுத்துவது, வாரந்தோறும் தலைக்கு ஆயில் மசாஜ் செய்வது போன்றவை மட்டும் போதாது, டயட்டில் ஒருசில மாற்றங்களையும் கொண்டு வர வேண்டும். இங்கு குளிர்காலத்தில் ஏற்படும் தலைமுடி பிரச்சனைகளைத் தடுக்க உதவும் உணவுகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
தலைமுடி வறட்சி குளிர்காலத்தில் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன், ஆளி விதைகள், பாதாம் போன்றவற்றை சாப்பிட்டு வந்தால், அது முடியின் ஆரோக்கியத்தை அதிகரிப்பதுடன், தலைமுடி வறட்சியடைவதைத் தடுக்கும்.
முடி வெடிப்பு முடியின் முனைகளில் வெடிப்புக்கள் ஏற்படுவதைத் தடுக்க, ஜிங்க் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இத்தகைய ஜிங்க் இறைச்சி, முட்டை, முழு தானியங்கள் மற்றும் நட்ஸ் போன்றவற்றில் உள்ளது. மேலும் இந்த உணவுப் பொருட்களில் வைட்டமின்களான பி6, பி12 மற்றும் சி போன்றவையும் உள்ளது. இந்த சத்துக்கள் அனைத்தும் தலைமுடி வெடிப்பை தடுப்பதோடு, தலைமுடியின் வளர்ச்சிக்கு உதவும்
சுருட்டை முடி உங்களுக்கு சுருட்டை முடியா? முடி பஞ்சுமிட்டாய் போன்று உள்ளதா? இதைத் தடுக்க அவகேடோ மற்றும் தயிர் கொண்டு ஹேர் பேக் போடுவதுடன், அவற்றை உணவில் சேர்த்தும் கொள்ள வேண்டும்.
எண்ணெய் பசை முடி வைட்டமின் பி நிறைந்த உணவுகள் தலையில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்துவதுடன், தலையில் சீரான அளவில் எண்ணெய் பசை இருக்கச் செய்யும். அதற்கு வைட்டமின் பி நிறைந்த உணவுகளான சிக்கன், மீன், மட்டன், பீன்ஸ், பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும்.
இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… https://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating