பவர் புல்லான தேதியில் வெளியாகும் பவர் பாண்டி…!!

Read Time:1 Minute, 26 Second

201612041732127913_power-paandi-release-power-ful-day_secvpfதனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம் ‘பவர் பாண்டி’. இப்படத்தில் ராஜ்கிரண், பிரசன்னா, சாயாசிங், மடோனா செபஸ்டியான் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு அதிவேகமாக நடந்து வரும் நிலையில், தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

அதன்படி, இப்படம் அடுத்த வருடம் தமிழ் புத்தாண்டையொட்டி ஏப்ரல் 14-ந் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளனர். பவர் பாண்டி படத்தை இயக்குவதோடு மட்டுமில்லாமல் ஒரு சிறிய கதாபாத்திரத்திலும் தனுஷ் நடிக்கிறார். இப்படத்தில் பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினியும் சிறிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். தனுஷ் இயக்கத்தில் முதன்முதலாக உருவாகிவரும் படம் என்பதால் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தொடையழகி ரம்பா மாதிரி மாறணுமா? அட இத ட்ரை பண்ணுங்க பாஸ்..!!
Next post பெருமளவான சிகரட்களுடன் இளைஞர்கள் இருவர் கைது..!!