முதலிரவில் மனைவியை இப்படியா கொடுமைபடுத்துவது? பொலிசில் புகார் கொடுத்த மனைவி…!!

Read Time:2 Minute, 9 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-6பஞ்சாப்பில் முதலிரவின் போது, மனைவியை பெல்ட்டை கொண்டு கொடூரமாக தாக்கிய கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரக்காண்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும், பஞ்சாப் மாநிலம் மொஹாலியைச் சேர்ந்த விஜய் என்பவருக்கும் அண்மையில் திருமணம் நடைபெற்றுள்ளது.

குறித்த பெண் திருமணத்திற்காக அமெரிக்காவில் இருந்து மொஹாலிக்கு வந்துள்ளார். திருமணமான முதல் நாள் இரவே கணவன், கையில் பெல்ட்டை வைத்துக்கொண்டு அந்த பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.

இதனால் சற்று அதிர்ச்சியடைந்த அப்பெண், பணம் தர மறுத்துள்ளார். பணம் தர மறுத்த காரணத்தினால் ஆத்திரமடைந்த கணவன் தன் கையில் வைத்திருந்த பெல்ட்டை கொண்டு அவரை கொடூரமாக தாக்கியுள்ளார்.

இதனால் பெரிதும் பாதிக்கப்பட்ட அப்பெண் காவல் நிலையத்திற்கு சென்று பொலிசாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

ஆனால் அவரின் உறவினர் பிரல கட்சி ஒன்றில் உறுப்பினராக இருப்பதால், அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு சற்று தயக்கம் காட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் இதற்கு தீர்வு ஊடகம் மட்டுமே என கூறி, தனக்கு நேர்ந்த கொடுமையை வெளி உலகத்திற்கு காட்டியுள்ளார். அதில் அவரின் கணவர் பெல்ட்டைக் கொண்டு தாக்கியதற்கான காயங்கள், அவரது உடம்பில் பெரும்பாலான இடங்களில் இருந்துள்ளது.

இது காட்டுத் தீ போல் பரவியதால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சபர்ணாவை தொடர்ந்து மற்றொரு பிரபல நடிகை மரணம்…!!
Next post கல்வி அறிவு இல்லாதவர்கள் விரைவில் மரணமடைகிறார்கள்: ஆய்வு தகவல்…!!