விஜய்யின் 24-வருட திரைப்பயணம்: விழாவாக கொண்டாடும் ரசிகர்கள்…!!

Read Time:2 Minute, 37 Second

201612041251362161_vijay-24-year-cinema-travel-fans-celebration_secvpfநடிகர் விஜய் திரையுலகில் அறிமுகமாகி இன்றுடன் 24 வருடம் முடிகிறது. அவர், 25-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளதை கொண்டாடும் வகையில் அவரது ரசிகர்கள் டுவிட்டரில் #24YearsOfUnrivalledVIJAY #24YearsOfVIJAYism #24YearsOfIlayaThalapathyVIJAY #24yearsofthalapathyism ஆகிய ஹேஷ்டேக்கை டுவிட்டரில் உருவாக்கி அதனை டிரெண்ட்டாக்கி வருகின்றனர்.

விஜய்-யின் 24 வருட திரைப்பயனத்தை கொண்டாடும் வகையில் இன்று சில திரையரங்குகளில் இவரது படங்கள் திரையிடப்படவுள்ளது. சில ஏரியாக்களில் அவரது ரசிகர்கள் பொதுமக்களுக்கு அன்னதானத்துக்கும் ஏற்பாடு செய்துள்ளனர்.

‘நாளைய தீர்ப்பு’ படம் மூலம் டிசம்பர் 4, 1992-ல் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார் விஜய். ஆரம்பகாலத்தில் சில சறுக்கல்களை சந்தித்தாலும் 1996-ஆம் வருடம் விக்ரமன் இயக்கத்தில் வெளியான ‘பூவே உனக்காக’ படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார். ‘திருமலை’, ‘கில்லி’, ‘போக்கிரி’, ‘துப்பாக்கி’, ‘கத்தி’, ‘தெறி’ என பல வெற்றிப்படங்களையும் கொடுத்துள்ள விஜய்-க்கு தற்போது தமிழ் சினிமா மட்டுமல்லாது கேரளா சினிமாவிலும் ரசிகர்கள் பட்டாளம் கொடிகட்டிப் பறக்கிறது.

இன்று தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தி என்று அழைக்கப்படும் அளவுக்கு இவரது புகழ் உலகம் முழுக்க பரவியிருக்கிறது. விஜய்-யின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படம் ‘துப்பாக்கி’. இப்படத்தின் வசூல் தமிழ் சினிமாவில் ஒரு மைல் கல்லாக பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் மன்னன் என்று சொல்லப்படும் விஜய், இதுவரை மூன்று முறை 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளார். இவர் நடிப்பில் உருவாகி வரும் ‘பைரவா’ திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளிவரும் நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே பல மடங்கு அதிகரித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனைவியின் மடியில் உயிரை விட்ட கணவர்: உதவி செய்யாமல் வீடியோ எடுத்த பொதுமக்கள்…!!
Next post அளவுக்கு அதிகமாக சுய இன்பம் ஆபத்தில் முடியும்…!!