பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண் கோமாவுக்கு சென்ற பரிதாபம்: அதிரவைக்கும் பின்னணி காரணம்…!!

Read Time:1 Minute, 45 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70தமிழகத்தில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டு இருந்த பெண் ஒருவருக்கு இரத்ததை மாற்றி கொடுத்ததால் அவர் கோமா நிலைக்கு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கமலா என்ற பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரசவம் முடிந்த நிலையில் கமலாவிற்கு இரத்தம் ஏற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து இரத்தம் ஏற்றிய சிறிது நேரத்தில் கமலா கோமா நிலைக்கு சென்றுள்ளார்

இதையடுத்து, கமலாவிற்கு பி நெகட்டிவ் இரத்தப் பிரிவுக்கு பதிலாக பி பாசிட்டிவ் பிரிவு இரத்தம் ஏற்பட்டதால் தான் அவர் கோமா நிலைக்கு சென்றுள்ளார் என அவரது உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.

திருமணமாகி 19 ஆண்டுகளுக்கு பின் முதல் குழந்தை பிறந்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது என அவரது உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த புகாரை மறுத்துள்ள திருவாரூர் அரசு மருத்துவமனை, கமலாவிற்கு முன்னதாக இதய நோய்க்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது, அதன் காரணமாக இது நடந்திருக்கலாம் என மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வட மத்திய மாகாண முதலமைச்சரின் வாகனத்தில் மோதுண்டு ஒருவர் பலி…!!
Next post 7 வயதில் அறுவைசிகிச்சை செய்த சிறுவன்! உங்களால் நம்பமுடிகிறதா?