கர்ப்பிணிகளுக்கு மருத்துவர் தரும் அட்வைஸ்…!!
கர்ப்பமான முதல் 3 மாதத்துக்கு சாப்பாட்டில் அதிக புளி, வெல்லம் பூண்டு சேர்க்கக் கூடாது. இதெல்லாம் சூட்டைக் கிளப்பும். ஆனால் 4ம் மாதத்திலிருந்து சில நேரங்களில் பூண்டு ரசம் வைத்து சாப்பிட்டால் கர்ப்பிணிப் பெண்ணின் உடம்பில் வாயு தங்காது. கர்ப்பிணிகள் 4ம் மாதத்திலிருந்து இடது பக்கமாகவே ஒருக்களித்துப் படுக்க வேண்டும்.
5 நிமிஷத்திற்கு மேல் மல்லாந்து படுக்கக் கூடாது. ஒரே பக்கமாகப் படுக்கக் கடினமாயிருந்தால் வலது பக்கமாக சிறிது நேரம் படுக்கலாம். அடிக்கடி புரண்டு படுக்கக்கூடாது. கொடி சுற்றிக்கொள்ளும். மருத்துவரீதியாக இடது பக்கம் படுப்பதே சிறந்தது. குழந்தைக்கு சீரான சுவாசமும் இரத்த ஓட்டமும் அப்போது தான் கிடைக்கும்.
5 மாதமாகி விட்டால் குழந்தை வளைய வரும்போது வயிற்றில் இழுத்துப் பிடித்துக்கொண்டு வலி வரும். விளக்கெண்ணையைக் காய்ச்சி வெந்தயத்தைப் போட்டு பொரித்து எடுக்க வேண்டும். அதைத் தொப்புளில் ஊற்றி, சுற்றித் தடவி, ஊறியதும் வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். இரவில் தடவி காலையிலும் குளிக்கலாம்.
மகப்பேறுற்ற மகளிர் அசல் குங்குமப்பூவின் தாள் 2 முதல் 5 வரை எடுத்துப் பகல் உணவுக்குப் பின் வெற்றிலையோடு சேர்த்து உண்ணலாம். அல்லது இரவில் பாலுடன் கலந்து பருகலாம். (குங்குமப்பூ உண்மையானவை என்பதற்கு அடையாளம்) இந்தத்தாளின் ஒரு பகுதியைக் கிள்ளி 1 குவளை நீரில் போட்டால் உடனே நீர் முழுவதும் செம்மஞ்சள் நிறம் ஆகிவிடும்.
தாள் மெல்ல மெல்லக் கரைவதைக் காணலாம். மணம் கமழும் மினுமினுப்பாய் இருக்கும் கருவமைந்த 5 மாதம் கழித்தபின் தொடர்ந்து இதனை வாரம் 3 நாட்களாவது உண்டு வர இரட்டைப் பயன் பெறலாம்; பிறக்கும் குழந்தை குங்குமச் சிவப்பில் ”கொழு கொழு” என்று இருக்கும். தாய்க்கும் குளிர்ச்சி காரணமாக வரக்கூடிய ஜன்னிக் காய்ச்சல் வராது.
தற்காலத்தில் ‘டெட்டனஸ்” ஊசிபோல அந்தக் காலத்தில் ”பிரசவ ஜன்னி” வராமல் காக்கும் மருந்தாகப் பயனாகியது. குங்குமப்பூ எனில் மிகையன்று இதனால் பிரசவ வலிகளும் குறைந்து குழந்தை பிறந்தவுடன் கருப்பையில் தங்கும் அழுக்குகளையும் அகற்றும் தன்மை இதற்குண்டு. பசியின்மை. அஜீரணம் மலச்சிக்கல் கபக்கோளாறு ஆகியவற்றால் மகப்பேறுற்ற மகளிர் தொல்லை அடையாமல் காக்க உதவும் அரிய மூலிகை” குங்குமப் பூ”.
கருதரிப்பதற்கு முன்னதாகவே ஃபோலிக் ஆசிட் (Folic Acid) மாத்திரையை எடுத்துக் கொள்வதால், குழந்தைக்கு ஏற்படும் பிறவி குறைபாடுகளைத் தவிர்க்க முடியும். கருவுற்ற ஆரம்பத்திலேயே ஹீமோகுளோபின், தைராய்டு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு போன்ற அடிப்படை டெஸ்ட்களை அவசியம் செய்து கொள்ள வேண்டும்.
கருவுற்ற தாய்மார்களுக்கு ரத்தசோகை ஏற்படுவது இயல்பு. இதனால், காய்கறிகள், கீரை மற்றும் பழ வகைகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும். ஆரம்பத்திலிருந்தே இரும்பு, கால்சியம் மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். கருவுற்ற காலத்தில் கட்டாயமாக மூன்று முறை ஸ்கேன் செய்துகொள்ள வேண்டும்.
கருவுற்ற ஆரம்ப காலத்தில் கரு சரியாக கர்ப்பப்பையில் உள்ளதா என தெரிந்துகொள்ள வேண்டும். 18-20 வாரத்தில் முழுமையாக வளர்ந்த கரு, பிறவிக் குறைபாடு இல்லாமல் இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். கருவுற்ற கடைசி மாதங்களில் கர்ப்ப காலத்திற்கு ஏற்ற வளர்ச்சி உள்ளதா என்றும், பனிக்குடம் நீர் சரியாக உள்ளதா என்றும் தெரிந்துகொள்ளும் ஸ்கேன் அவசியம் செய்துகொள்ள வேண்டும்.
கருவுற்ற காலங்களில் அமைதியான மனநிலையில் இருப்பது அவசியம். தினமும் எட்டு மணி நேரம் உறங்க வேண்டும். மூன்று முதல் நான்கு லிட்டர் வரை தண்ணீர் அருந்த வேண்டும். 40 நிமிடங்கள் மிதமான நடைப்பயிற்சி செய்தல் வேண்டும்.
இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மகளிர் பக்கம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5
Average Rating