குட்டி கமல்: ஜெயம் ரவியை புகழ்ந்து தள்ளிய பிரபுதேவா…!!

Read Time:3 Minute, 20 Second

201612031759015980_prabhu-deva-praised-jayam-ravi-is-a-kutti-kamal_secvpfஜெயம் ரவி – ஹன்சிகா நடிப்பில் லஷ்மண் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘போகன்’. அரவிந்த் சாமி, வி.டி.வி.கணேஷ், ஆடுகளம் நரேன், அஸ்வின் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ளார். ஐசரி கணேஷ், பிரபு தேவா இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்ட பணிகள் முடிவடைந்து வரும் 23-ம் தேதி ரிலீசாக உள்ளது. ஸ்ரீ கிரீன் புரொடக்சன் படத்தை வெளியிடுகிறது.

இந்நிலையில், ‘போகன்’ படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது. இதில், ஜெயம் ரவி, ஹன்சிகா, ஐசரி கணேஷ், பிரபு தேவா, ஸ்ரீ கிரீன் புரொடக்சன் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பிரபுதேவா பேசுகையில், “எனது தயாரிப்பில் போகன் படத்தைத்தான் முதலில் தயாரிப்பதாக இருந்தோம். இதற்காக பேச்சுவார்த்தை நடத்தி பணிகளையும் தொடங்கினோம். ஆனால், ‘தேவி’ படம் முதலில் முடிந்து வெளிவந்துள்ளது.

மாறுபட்ட கதையம்சம் கொண்ட போகனை லஷ்மண் மிகவும் நன்றாக இயக்கியிருக்கிறார். வித்தியாசமான கதையை இயக்குவது என்பது மிகவும் கடினம். அதை அவர் சிறப்பாக செய்திருக்கிறார். 80 சதவீதம் படத்தை பார்த்துவிட்டேன். அழகாக வந்திருக்கிறது. அவருக்கு எனது பாராட்டுக்கள்.

இதேபோல் படத்தில் ஜெயம் ரவி, ஹன்சிகா அரவிந்த் சாமி என ஒவ்வொரு கேரக்டரும் தங்களுக்குரிய பணியை ஒரு டீமாக சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

ஜெயம் ரவி ஒரு குட்டி கமலஹாசன். அவர் ஒன்றும் தெரியாதவர் போன்று அமைதியாக இருப்பார். ஆனால், ஒவ்வொரு அம்சங்களையும் திரும்பத் திரும்ப கேட்டு தெரிந்துகொண்டு, படத்தை சிறப்பாக கொண்டுவரும் அளவுக்கு நடித்துக் கொடுப்பார்.

ஹன்சிகாவைப் பொருத்த வரை இதில் வித்தியாசமான நடிப்பை வழங்கியிருக்கிறார். அவரது நடிப்பை நேரில் பார்த்து ஆச்சரியப்பட்டேன்.

அரவிந்த் சாமியுடன் ‘மின்சாரக் கண்ணா’ படத்தில் நடித்தபோது எங்களுக்குள் நட்பு கிடையாது. இந்த படத்தில் இணைந்ததன்மூலம், இருவருக்குமிடையே நல்ல நட்பு உருவாகி உள்ளது. அவரும் இப்படத்தில் தனது கேரக்டரை நன்றாக செய்திருக்கிறார்.

மொத்தத்தில் ‘போகன்’ எல்லோருக்கும் வெற்றியைத் தேடித்தரும் படமாக இருக்கும். ரசிகர்களுக்கும் மிகவும் பிடிக்கும்” என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இனி உங்களது பொருட்கள் சேதமடைந்த தூக்கி தூற வீசிடாதீங்க…!! வீடியோ
Next post பெண்களுக்கான உடற்பயிற்சிகள் என்னென்ன?