சேலம் கல்லூரியில் படிக்கும் கென்யா நாட்டு மாணவி கற்பழிப்பு: வாலிபர் கைது…!!

Read Time:3 Minute, 47 Second

201612031040034399_college-student-molested-youth-arrested-near-salem_secvpfசேலம், அம்மாப்பேட்டை அருகே உள்ள அதிகாரிப்பட்டி பகுதியில் வெளிநாட்டை சேர்ந்த மாணவ, மாணவிகள் சிலர் தங்கி இருந்து அதே பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளை படித்து வருகிறார்கள்.

இந்த கல்லூரியில் கென்யா நாட்டை சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க மாணவி ஒருவர், அதே பகுதியில் வீடு எடுத்து தங்கியிருந்து எம்.எஸ்.சி. என்ற முதுகலை பட்டப்படிப்பை படித்து வருகிறார்.

இந்த நிலையில், அதே கல்லூரியில் எம்.பி.ஏ. படித்து முடித்த நைரோபி நாட்டை சேர்ந்த வாலிபர் எரிக் மொழுங்கி இந்துலிக் (வயது 25) என்பவருக்கும் அந்த மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்தனர்.

அப்போது வாலிபர் எரிக் மொழுங்கி இந்துலிக் இந்த பழக்கத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டார். இதைதொடர்ந்து எரிக் மொழுங்கி இந்துலிக் சம்பவத்தன்று மாணவியை நைசாக பேசி தான் தங்கி இருக்கும் அறைக்கு அழைத்து சென்றார். பின்னர், அங்கு வைத்து மாணவியை வலுக்கட்டாயமாக கற்பழித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி அம்மாப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு இந்த சம்பவம் பற்றி புகார் கொடுத்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சுரேகா வழக்குப்பதிவு செய்து நைரோபி நாட்டை சேர்ந்த வாலிபர் எரிக்மொழுங்கி இந்துலிக்கை கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்.

தற்போது நடத்திய முதற்கட்ட விசாரணையில், வாலிபர் எரிக் எம்.பி.ஏ. படித்து முடித்த பிறகு சொந்த ஊருக்கு செல்லாமல் நண்பர்களுடன் இங்கேயே தங்கி இருந்துள்ளார். அப்போது, தான் அந்த கென்யா நாட்டு மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது.

இதையடுத்து இருவரும் மோட்டார் சைக்கிளில் பெரிய ஓட்டல்கள், சினிமா தியேட்டர்கள், சுற்றுலா தலங்கள் என பல்வேறு இடங்களுக்கு சென்று அங்கு ஒன்றாக சுற்றி திரிந்துள்ளனர்.

இதனால் ஒரு கட்டத்தில் மாணவியின் மீது அவருக்கு மோகம் ஏற்பட்டது. எப்படியாவது மாணவியை அடைந்து தீரவேண்டும் என எண்ணினார். அதன்படி சம்பவத்தன்று வாலிபர் எரிக் நைசாக பேசி அறைக்கு அழைத்து சென்று அங்கு வைத்து மாணவியை கற்பழித்தது தெரியவந்தது.

கற்பழிப்பு சம்பவத்தில் மாணவி காயம் அடைந்ததாக தெரிகிறது. இதனால் அவர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

வெளிநாட்டு மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கஞ்சா தோட்டங்களாக மாற உள்ள பூந்தோட்டங்கள்…!!
Next post மாவீரன் கிட்டு…!! விமர்சனம்