விண்வெளி மையத்திற்குச் சென்ற விமானம் மர்மமான முறையில் அழிப்பு…!!

Read Time:2 Minute, 32 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90சர்வதேச விண்வெளி மையத்திற்கு சரக்குகளை ஏற்றிச் சென்ற ரஷ்யாவிற்குச் சொந்தமான விண்வெளி விமானம் ஒன்று நடுவானில் மர்மமான முறையில் தீப்பற்றி எரிந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விண்வெளி ஆய்வுப் பணிகளுக்காக ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி மையம் ஒன்றை நிர்வகித்து வருகின்றன.

இந்த நாடுகளில் இருந்து, அவ்வப்போது விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்று, பல நாட்கள் தங்கியிருந்து, ஆய்வுப் பணிகள் மேற்கொண்டுவிட்டு, பூமிக்குத் திரும்புவது வழக்கம்.

இதேபோன்று, விண்வெளி மையத்தில் உள்ள தங்கள் நாட்டு வீரர்களுக்குத் தேவையான சரக்குப் பொருட்களை அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் சிறப்பு விமானம் மூலமாக அனுப்பி வருகின்றன.

இந்நிலையில், இன்று அதிகாலை பைகானுர் ஏவுதளத்தில் இருந்து, ரஷ்யா சார்பாக, சிறப்பு ஆளில்லா விண்வெளி சரக்கு விமானம் ஒன்று, ஏவப்பட்டுள்ளது.

இது புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, நடுவானில் மர்மமான முறையில் தீப்பற்றி வெடித்துச் சிதறியுள்ளதாகவும், இதன் பாகங்கள் பல்வேறு இடங்களில் சிதறி விழுந்ததாகவும், இந்த சம்பவம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளதாகவும் ரஷ்யா குறிப்பிட்டுள்ளது.

இதற்கு முன்னரும் 2 முறை ஆளில்லா சரக்கு விமானம் அனுப்பியபோது நடுவானில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன் உண்மைக் காரணம் பற்றி விரிவான ஆய்வு நடத்திவருவதாகக் கூறியுள்ள ரஷ்யா, இதில் சக போட்டி நாடுகள் விஷமத்தனம் செய்துள்ளார்களா என்றும் சந்தேகம் எழுப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வீட்டை க்ளீன் பண்ணனுனா… என்ன தாண்டி தரைய தொட்றா பாத்துகலாம்…!! வீடியோ
Next post உணவகத்தில் தீ! 4 இலட்சம் ரூபாய் நஷ்டம்…!!