குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சியில் கைகலப்பு: குஷ்பு மன்னிப்பு கேட்க ரஞ்சனி வலியுறுத்தல்…!!

Read Time:4 Minute, 20 Second

201612021133269849_family-problem-program-ranjani-request-to-khushboo-apologize_secvpfநடிகைகள் குஷ்புவும், லட்சுமி ராமகிருஷ்ணனும் டெலிவிஷன்களில் குடும்ப தகராறுகளை தீர்த்து வைக்கும் பஞ்சாயத்து நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். கணவன்-மனைவி தகராறு, வரதட்சணை பிரச்சினைகள், காதல் விவகாரம் என்று பல்வேறு குடும்ப பிரச்சினைகளை இதில் அலசி விவாதிக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிகள் காரசார வாக்குவாதம், அழுகை, அடிதடி என்றெல்லாம் போவது உண்டு.

சமீபத்தில் குஷ்பு நடத்திய பஞ்சாயத்தில் தகராறு மூண்டு அதில் கலந்து கொண்ட ஒருவரை அவர் சட்டையைப் பிடித்து இழுத்து அடிக்க பாய்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிகழ்ச்சிகளுக்கு தற்போது திடீர் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

நடிகைகள் பஞ்சாயத்தை விமர்சித்து நடிகை ஸ்ரீப்ரியாவும் கருத்து வெளியிட்டார். அவர் கூறும்போது, “குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகள் நடத்த நடிகைகளுக்கு தகுதி இல்லை. குடும்ப பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வக்கீல்களும், நீதிபதிகளும் இருக்கிறார்கள்.” என்றார்.

தற்போது முதல் மரியாதை, கடலோர கவிதைகள், மண்ணுக்குள் வைரம், உரிமை கீதம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள முன்னாள் கதாநாயகி ரஞ்சனியும், குஷ்பு, லட்சுமி ராமகிருஷ்ணனை கண்டித்து உள்ளார்.

டுவிட்டரில் அவர் கூறி இருப்பதாவது:-

கவுன்சிலிங் கொடுக்கிறேன் என்று பல்வேறு மொழிகளில் டெலிவிஷன் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதனை வெட்கக்கேடான நிகழ்ச்சியாகவே நான் பார்க்கிறேன். தாக்குதல், பாலின பாகுபாடு, பொதுமக்களுக்கான தொல்லைகளாகவே இவை இருக்கின்றன. நடிகைகள் இந்த நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். இதன்மூலம் குடும்ப கவுரவம் குறைக்கப்படுகிறது. அப்பாவிகள் பலிகடா ஆக்கப்படுகின்றனர்.

ஏழைகளுக்கு கவுன்சிலிங் கொடுப்பதற்கு நடிகைகளுக்கு தகுதி இல்லை. அந்த பணிகளை செய்ய தொண்டு அமைப்புகளும் கோர்ட்டுகளும் இருக்கின்றன. நடிகை குஷ்பு இந்த பஞ்சாயத்து நிகழ்ச்சியில் ஒருவரின் சட்டையை பிடித்து இழுத்து ஆவேசமாக பேசி இருக்கிறார். இதுதான் கவுன்சிலிங்கா? அந்த நபர் கோர்ட்டுக்கு செல்லும் முன்பு குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும்”

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நடிகை ஸ்ரீப்ரியாவுக்கு, லட்சுமி ராமகிருஷ்ணன் பதில்

இந்த பிரச்சினை குறித்து நிகழ்ச்சியிடமும், எங்களிடமும் நம்பிக்கை இருப்பதால்தான் எங்களை தேடி மக்கள் வருகிறார்கள். அவர்களுக்கு சரியான வழியை காட்டுவதுதான் எங்கள் நோக்கம். ஒருசில விஷயங்களை போலீசிடம் ஒப்படைப்போம், ஒருசில விஷயங்களுக்கு வக்கீலை ஏற்பாடு செய்து தருகிறோம்.

ஸ்ரீப்ரியா, தொகுப்பாளரின் ஆடை ஆடம்பரத்தை பற்றி பேசியிருக்கிறார். அரைகுறையாக ஆடை அணிந்து ஒழுக்கமில்லாமல் உடலைகாட்டி உட்காருவதுதான் தவறு. ‘டீஸண்டாக’ நல்ல ‘டிரஸ்’ பண்ணியிருப்பதில் எந்த தவறும் இல்லை. அதனால், அவர் என்னுடையை ஆடை அலங்காரத்தை குறித்து பேசக்கூடாது.

இவ்வாறு லட்சுமி ராம கிருஷ்ணன் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உயிரிழந்த சகோதரனின் சடலத்துடன் ஒரு மாதம் வாழ்ந்த நபர்: காரணம் என்ன?
Next post ஓர் இருண்ட காலத்தின் தொடக்கம்…!! கட்டுரை