அதிக முடி உதிர்தலுக்கு இந்த வெந்தயத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்?

Read Time:5 Minute, 26 Second

fenugreekmask-30-1480498450வெந்தயத்தில் அடங்கியுள்ள புரோட்டீன்கள், வைட்டமின் சி, இரும்புச்சத்து, நிக்கோடினிக் அமிலம் மற்றும் லெசித்தின் போன்ற உட்பொருட்கள் உங்கள் முடியின் வேர்கண்களை வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் ஆக்கும்.

இது முடி வளர்ச்சியினை அதிகரித்து வலுவற்ற வேர்கண்களை வலுவாகக் கட்டமைக்க உதவுகிறது.

வல்லுநர்கள் முடிஉதிர்வை மற்றும் பொடுகைத் தடுக்க வெந்தயத்தை சிறந்த ஒரு மருந்தாக இருக்கும் என பரிந்துரைக்கிறார்கள்.

வெந்தயம் விலை மலிவான பொருளாக இருப்பதுடன் அதன் பலன்கள் மிகவும் உறுதியாக நம்பத் தகுந்தவை. தொடர்ந்து இதை பயன்படுத்திவந்தால் இது அறுபுத்தங்களை செய்யும்.

பொடுகை போக்கும் சூப்பரான மாஸ்க் : வெந்தயத்தை அரைத்து அதனுடன் எலுமிச்சை சாறை சேர்த்து ஸ்கால்ப்பில் தடவுங்கள்.

இதை செய்ய கைப்பிடியளவு வெந்தயத்தை இரவில் தண்ணீரில் ஊறவிட்டு காலையில் எடுத்து அரைத்து ஒரு மேஜைக்கரண்டி எலுமிச்சை சாறை விட்டு நன்கு கலக்கிக்கொள்ள வேண்டும். இதை உங்கள் ஸ்கால்ப்பில் தடவவும்.

தயிருடன் வெந்தயம் :

தயிரையும் வெந்தய இலைகளையும் கொண்டு உங்கள் முடி உதிர்வை நிச்சயம் கட்டுப்படுத்த முடியும்.

கொஞ்சம் வெந்தயக் கீரையை எடுத்து அதை வேகவைத்து சாற்றைப் பிழிந்து எடுத்துக்கொள்ளுங்கள். அதே அளவு தயிரை அதனுடன் கலந்து நன்கு கலக்கி அதை ஸ்கால்ப்பில் தடவ வேண்டும்.

வெந்தயமும் நெல்லிக்காயும் தலைமுடி நரைக்கு ஒரு சிறந்த தீர்வாக வெந்தயம் மற்றும் நெல்லிக்காய் தூளும் எலுமிச்சையும் உதவும்.

இவற்றை நன்கு கலக்கி அந்த கூழை ஸ்கால்ப்பில் தடவி கைய வைக்கவும். பின்னர் தண்ணீர் கொண்டு அலசவும்.

வெந்தயமும் பாலும் சேர்ந்த கண்டிஷனர் ஆம். வெந்தயம் ஒரு இயற்கையான கண்டிஷனராக செயல்படக்கூடியது.

பாலும் வெந்தயத் தூளும் சேர்ந்தால் ஒரு நல்ல கண்டிஷனர் கிடைக்கும். இதை கலந்து ஸ்கால்ப்பில் தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.

வெந்தயமும் முட்டையும் : உங்கள் முடி வறட்சியாக உள்ளதா? கவலைப்பட வேண்டாம். வெந்தயமும் முட்டையும் சேர்ந்த மாஸ்க் இதற்க்கு நல்ல பலன் தரும். கைப்பிடி அளவு வெந்தயத்தை ஊறவைத்து அரைத்துக் கொள்ளுங்கள்.

இதில் முட்டையை உடைத்து கலக்கி தலையில் தடவிவர சிறந்த பலன்களைக் காண முடியும்.

வெந்தயமும் தேங்காய் எண்ணெயும் வெந்தயத் தூளில் தேங்காய் என்னையைக் ஒரு கிண்ணத்தில் கலந்து அந்த கிண்ணத்தை ஒரு பெரிய கிண்ணத்தில் தண்ணீர் விட்டு அதில் வைக்கவும். பின்னர் பெரிய கிண்ணத்தில் உள்ள நீரை கொதிக்க விடவும்.

தேங்காய் எண்ணெய் சூடானவுடன் அதை வெயிலில் ஒரு வாரத்திற்கு வைக்கவேண்டும். பின்னர் தினமும் தலையில் தடவி வர நல்ல பலன்களை காணலாம்.

வெந்தயமும் தண்ணீரும் உங்கள் முடி ஆரோக்கியத்திற்கு ஒரு சிறந்த மிகவும் சுலபமான வழி இது. வெந்தயத்தை இரவில் ஊற வைத்து காலையில் அதை கூழாக அரைத்துக்கொள்ளவும்.

அதை தலையில் தேய்த்து ஒரு 45 நிமிடம் கழித்து அலசிவிடவு

விளக்கெண்ணெய் வெந்தயமும் வெந்தயத்தூள் இரு மேஜைக்கரண்டியும் ஒரு மேஜைக்கரண்டி விளக்கெண்ணெய் அல்லது ஆமணக்கெண்ணையையும் கலந்துகொள்ளவும்.

இதை தலையில் தடவி மென்மையாக மசாஜ் செய்யவும். இது சூழல் மாசுபாட்டால் ஏற்படும் முடி சேதாரத்தை சரிசெய்யும்

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மகளிர் பக்கம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பட அதிபர் மதன் மீண்டும் சிறையில் அடைப்பு…!!
Next post பெங்களூரு ரியல் எஸ்டேட் அதிபரை மணக்கிறார் அனுஷ்கா…!!