பிளாஸ்டிக் பை அரிசியாக மாறும் அதிர்ச்சிக் காட்சி… மிகவும் உஷார் மக்களே…!! வீடியோ
அசல்களைப் போன்றே சற்றும் மாறாமல் போலிகளைத் தயாரிப்பதில் வல்லவர்களாக சீன தேசத்தவர்கள் விளங்குகின்றனர். தமது வியாபார நோக்கத்திற்காக தயாரிக்கப்படும் இவ்வாறான போலிகளால் ஏனைய நாட்டு மக்கள் பாதிப்பப்படுவதை அவர்கள் சிறிதும் கணக்கெடுப்பதில்லை.
இந்த போலி விவகாரம் உணவு வரை பரவியிருந்த நிலையில் அரிசி, முட்டை என தொடர்கின்றது. இந் நிலையில் சீனாவில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி பிளாஸ்டிக் அரிசி தயாரிக்கின்றார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
குறித்த வீடியோவில் இளைஞர் ஒருவர் பாவனைக்கு உதவாத சில பிளாஸ்டிக் பைகளை இயந்திரம் ஒன்றில் போடுகின்றார். சிறிது நேரத்தில் அவை அரிசியாக வெளியே வருகின்றது. இதோ அந்த அதிர்ச்சி வீடியோ!.
நாம் சமைக்கும் அரிசியில் பிளாஸ்டிக் அரிசியை எப்படி கண்டுபிடிப்பது?…
உலகில் சீனாவில் அரிசி அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு ஒரு வருடத்தில் சுமார் 200 மில்லியன் டன் அரிசி அறுவடை செய்யப்படுகிறது. அதுமட்டுமின்றி, இங்கு அறுவடை செய்யப்படும் அரிசி உலகின் பல பகுதிகளுக்கும் இறக்குமதி செய்யப்படுகிறது.
சீன பொருட்கள் என்றாலே தரமற்றது என்ற எண்ணம் பலரது மனதில் உள்ளது. இதற்கு அங்கு போலிப் பொருட்கள் அதிகம் உற்பத்தி செய்யப்படுவதால் தான். குறிப்பாக சீனாவில் உணவுப் பொருட்கள் கூட போலியாக தயாரிக்கப்பட்டு, பல நாடுகளுக்கு இறக்குமதி செய்யப்படுகிறது. அதில், பிளாஸ்டிக் அரிசி, முட்டைக்கோஸ் போன்றவை குறிப்பிடத்தக்கவை. சரி, இப்போது அரிசியில் இருக்கும் பிளாஸ்டிக்கை எப்படி கண்டறிவது என்று காண்போம்
தண்ணீர் சோதனை
1 டேபிள் ஸ்பூன் அரிசியை குளிர்ந்த நீரில் போட்டு சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். அப்படி ஊற வைக்கும் போது அரிசி பாத்திரத்தின் அடியில் சென்றால், அந்த அரிசி நல்ல அரிசி. அதுவே மேலே மிதந்து கொண்டிருந்தால், அந்த அரிசி பிளாஸ்டிக் அரிசி. எனவே சமைக்கும் முன் அரிசியை ஊற வைத்து, பின்பு பயன்படுத்துங்கள்.
நெருப்பு சோதனை
முதலில் நெருப்பை மூட்டி, வாங்கிய அரிசியில் சிறிதை நெருப்பில் போடுங்கள். அப்போது அரிசி எரிந்து, பிளாஸ்டிக் நாற்றம் வீசினால், அந்த அரிசி பிளாஸ்டிக் அரிசியாகும்.
அம்மிக் கல் சோதனை
அம்மிக்கல்லில் சிறிது அரிசியை போட்டு, அதனை அரைக்க வேண்டும். அப்போது அது நன்கு பொடியாகி, வெள்ளை நிறத்தில் பவுடரானால், அது நல்ல அரிசி. செயற்கை அரிசியாக இருந்தால், அது மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
பூஞ்சை சோதனை
உங்கள் வீட்டில் உள்ள அரிசி நல்ல அரிசியா அல்லது செயற்கை அரிசியா என்பதை பூஞ்சை சோதனையின் மூலம் அறியலாம். அதற்கு வீட்டில் உள்ள அரிசியை சமைத்து, பின் அதில் சிறிதை ஒரு பாத்திரத்தில் போட்டு தட்டு கொண்டு மூடி, வெதுவெதுப்பான இடத்தில் வைக்க வேண்டும். அப்படி வைத்து இரண்டு நாட்கள் கழித்து, பார்க்கும் போது, சாதத்தில் பூஞ்சை இருந்தால், அது நல்ல அரிசி சாதம். போலி அரிசியாக இருந்தால், அதில் பூஞ்சை வராது.
இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B
Average Rating