கல்குவாரி குட்டையில் பிணமாக மிதந்த 2 பேர் உடல்கள் மீட்பு…!!

Read Time:1 Minute, 17 Second

201611300811200905_2-people-were-dead-bodies-floating-in-the-pond-quarries_secvpfசென்னையை அடுத்த மேடவாக்கம் முல்லை தெருவில் உள்ள கல்குவாரி குட்டையில் 2 பேர் பிணமாக கிடப்பதாக நேற்று பள்ளிக்கரணை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார், வேளச்சேரி தீயணைப்பு துறையினருடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அவர்கள் கல்குவாரி குட்டையில் மிதந்த 45 வயது மதிக்கத்தக்க 2 ஆண்களின் உடல்களை மீட்டனர். இதையடுத்து போலீசார் அந்த உடல்களை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என்ற விவரங்கள் தெரியவில்லை.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து உள்ள போலீசார் அவர்கள் இருவரும் மது போதையில் குட்டையில் தவறி விழுந்தார்களா? அல்லது யாரேனும் அவர்களை குட்டையில் தள்ளி கொலை செய்தார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post துருக்கியில் பயங்கர தீவிபத்து: பள்ளி மாணவிகள் உட்பட 12 பேர் பலி…!!
Next post பெரம்பலூர் அருகே சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த முதியவர் கைது…!!