இரவில் வியர்ப்பது ஆபத்தை ஏற்படுத்துமா?

Read Time:3 Minute, 48 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-4பொதுவாக அனைவருக்கும் பகலில் வியர்ப்பது இயல்பான ஒன்றாகும். ஆனால் இரவிலும் சிலருக்கு கடுமையாக வியர்க்கும்.

ஏனெனில் நமது வீட்டில் இருக்கும் காற்றோட்டம் இல்லாத சூழல், சமையல் அறையின் வெப்பம், நாம் உடுத்தியிருக்கும் ஆடைகளின் தன்மை இது போன்ற முக்கிய காரணங்கள் மூலம் இரவில் அதிகமாக வியர்வைகள் ஏற்படுகிறது.

எனவே இந்த காரணங்கள் மூலம் ஒருவருக்கு வியர்ப்பதில் எந்தவிதமான பிரச்சனைகளும் இல்லை.

ஆனால் இவற்றில் எந்தவித காரணமும் இல்லாமல், சாதரணமாக வியர்வை ஏற்பட்டால், உடனே மருத்துவரை சென்று பார்த்து, அவர்களின் ஆலோசனைகளை பெறுவது மிகவும் நல்லது.

இரவில் அதிகமாக வியர்ப்பதற்கு என்ன காரணம்?

பெண்களில், சிலருக்கு மெனோபாஸ் காரணமாக, அவர்களின் உடலானது அதிகமாக சூடாகுவதை போல உணர்வதால், இரவு நேரங்களில் அதிகமாக வியர்க்கும்.

இரவில் அதிகமாக வியர்வை ஏற்பட்டால், அவர்களுக்கு இடியோபதிக் ஹைப்பர்ஹிட்ரோசிஸ் (Idiopathic hyperhidrosis) பிரச்சனையும் காரணமாக இருக்கலாம். எனவே மருத்துவரின் ஆலோசனைகள் பெறுவது மிகவும் நல்லது.

ஹெச்.ஐ.வி தொற்றுகள், டி.பி தொற்றுகள் இது போன்ற தொற்றுகளின் பாதிப்புகள் அதிகமாக இருந்தால் கூட இரவு நேரங்களில், அதிகமாக வியர்வைகள் வெளிப்படும். இதனால் இதய வால்வுகள், எலும்புகளில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது.

நிணநீர் சுரப்பு புற்றுநோய்களின் அறிகுறியாக இரவு நேரங்களில் அதிகமாக வியர்க்கும் தன்மைகள் ஏற்படுகிறது. இதனால் திடீரென உடல் எடை குறைதல், காய்ச்சல் மற்றும் அதிகமாக வியர்த்தல் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

காய்ச்சல் மற்றும் அதிகமான மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு, நாம் எடுத்துக் கொள்ளும் மருந்துகளின் மூலமாகவும் கூட இரவில் அதிகமாக வியர்க்கும் தன்மையை ஏற்படுகிறது.
நீரிழிவு நோய் உள்ளவர்கள், அவர்களின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும் போது, அளவுக்கு அதிகமான வியர்வைகளை உண்டாக்குகிறது.

ஹைப்பர் தைராய்டிசம் உள்ளிட்ட சிலவகை ஹார்மோன்களின் கோளாறுகள் காரணமாக நமது உடல் அதிகமாக சூடாவதுடன், அதிகமான வியர்வையும் ஏற்படச் செய்கிறது.

பக்கவாதம், நரம்பு மண்டல தொடர்பான நோய்கள் இருப்பவர்களுக்கு, இரவில் அதிகமான வியர்வையை ஏற்படுத்தும். எனவே இது மாதிரியான பிரச்சனைகளை அலட்சியம் செய்யாமல், மருத்துவ ஆலோசனைகள் பெறுவது மிகவும் அவசியமாகும்

*** இதுபோன்ற “அவ்வப்போது கிளாமர்” செய்திகளை பார்வையிட இங்கே அழுத்தவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உணவில் தினமும் அப்பளம் சேர்த்துக் கொள்வது நல்லதா?
Next post சப்பா… இப்பவே கண்ணக்கட்டுதே! இவங்க எல்லாம் எங்கிருந்து தான் கிளம்பி வாராங்களோ தெரியல? வீடியோ