உலகின் அதிபயங்கரமான சிறைச்சாலைகள்…!!

Read Time:4 Minute, 48 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-4குற்றசெயல்களை புரிந்துவிட்டு சிறைச்சாலைக்கு செல்லும் மனிதர்கள் அங்கு தாங்கள் அனுபவிக்கும் சித்ரவதைகள் மற்றும் தங்களது வேறுபட்ட வாழ்க்கை முறைகளால், இனிமேல் தங்களது வாழ்வில் குற்றச்செயல்களே செய்யக்கூடாது என்று உறுதிமொழி எடுக்கும் அளவுக்கு உலகில் சில சிறைச்சாலைகள் அமைந்துள்ளது.

சில சிறைச்சாலைகளில் குற்றவாளிகள் சுதந்திரமாய் உலாவினாலும், பல சிறைச்சாலைகளில், கொடுக்கப்படும் உணவுகள், தங்கும் இடங்கள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளின் அணுகுமுறை போன்றவை மிக மோசமாக உள்ளன.

அந்த வகையில் உலகின் சில அதிபயங்கரமான சிறைச்சாலைகள் இதோ,

பனாமா சிறைச்சாலை

பனாமாவில் அமைந்துள்ள சிறைச்சாலையில் அதிக குற்றவாளிகள் இருப்பதால், இங்கு கைதிகள் தூங்குவதற்கு கூட இடமில்லை.

இதனால் இரவில் குற்றவாளிகள் தூங்கும்போது கூட நேராக படுக்கக்கூடாது. மாறாக குற்றவாளிகள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக சரிவாக படுக்க வேண்டும்.

மேலும், இவர்களுக்கு வழங்கப்படும் உணவுகளை கூட இவர்கள் கம்பிகளை விட்டு வெளியில் வந்து வாங்குவதில்லை. சிறைக்குள்ளேயே வரிசையில் இவர்கள் நின்றுகொண்டிருக்க, கம்பிகளுக்கு இடைவெளியில் வழங்கப்படுகின்றன.

கலிபோர்னியா சிறைச்சாலை

கலிபோர்னியாவின் San Quentin எனும் சிறைச்சாலையில் இறந்தவர்களை சவப்பெட்டிக்குள் அடைத்து வைப்பது போன்று கைதிகள் அடைத்துவைக்கப்பட்டுள்ளனர்.

கைதிகள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பெட்டிகள் வடிமைக்கப்பட்டுள்ளன. அதற்கென தனியாக பூட்டுகளும் இருக்கின்றன. கைதிகள் சாப்பிட மற்றும் குளிக்க செல்லும் நேரங்களை தவிர இவர்கள் அந்த பெட்டிக்குள் அடைத்து வைக்கப்படுகின்றனர்.

El Slavador

Ms – 13 என்ற சர்வதேச குற்றவாளி கும்பலானது பல்வேறு குற்றசெயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கும்பலை சேர்ந்தவர்கள் அதிகமாக அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தான் இருக்கின்றனர்.

இந்த கும்பலை சேர்ந்த குற்றவாளிகள் பிடிபட்டால் இவர்களுக்கு வழங்கப்படும் சிறைதண்டனை மிகவும் மோசமாக இருக்கும்.

ஒரு அறைக்குள், அதிகமான கைதிகளை அடைத்துவைப்பதால், கூட்ட நெரிசல் காரணமாக இவர்கள் அனைவரும் எப்போதும் கம்பிகளுக்கு இடையில் தலையினை விட்டு எட்டிப்பார்க்கும் நிலை பரிதாபமாக இருக்கும்.

திருநங்கைகள் மற்றும் ஓரினச்சேர்க்கையாளர்களுடன் தங்குவது

அமெரிக்காவின் பனாமா நகரில் அமைந்துள்ள சில சிறைச்சாலைகளில் குற்றவாளிகள், ஓரினச்சேர்க்கை நபர்கள் மற்றும் திருநங்கைகளுடன் தங்கும் நிலைக்கு தள்ளப்படுவதால், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் இவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

மேலும், இந்த சிறையில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளும் தங்கவைக்கப்பட்ட, இவர்களுக்கு தேவையான உணவினை இவர்களே சமைத்துக்கொள்கின்றனர்.

பெரு சிறைச்சாலை

பெரு நாட்டில் அமைந்துள்ள சிறைச்சாலையில் கைதிகள் தங்குவதற்கு கூட இடமில்லாமல் சிறையின் மேற்கூரைகளில் வெயிலையும், மழையையும் பொருட்படுத்தாமல் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதில், சில கைதிகள் சிறைச்சாலைக்குள்ளும், பல கைதிகள் சிறையின் மேற்கூரை பரப்பில் தங்கவைப்பட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதல் ஜோடிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்…!!
Next post முத்துராமலிங்கம் படத்தின் மொத்த கதையையும் போட்டு உடைத்த இயக்குனர்…!!