கோவளம் வந்த ஜப்பான் பெண்ணை கற்பழித்த சங்கு வியாபாரி கைது…!!

Read Time:3 Minute, 15 Second

201611271835259085_kovalam-conch-dealer-arrested-japan-woman-torture_secvpfகேரள மாநிலத்திற்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருகிறார்கள்.

திருவனந்தபுரம் அருகே உள்ள கோவளம் மற்றும் விழிஞ்ஞம், சிறையின் கீழ் போன்ற இயற்கை எழில் கொஞ்சும் கடற்கரை பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் கடலில் நீராடியும், சூரிய குளியல் செய்தும் மகிழ்கிறார்கள்.

கேரளாவிற்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணிகளிடம் அத்துமீறும் சம்பவங்களும் கற்பழிப்புகளும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த ஆண்டு மட்டும் இதுவரை 4 வெளிநாட்டு பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக குற்ற வாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கோவளம் வந்த ஜப்பான் நாட்டு சுற்றுலா பயணி கற்பழிக்கப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது. கோவளம் கடற்கரையில் சங்கு வியாபாரம் செய்து வருபவர் தேஜாபவார் (வயது 26). இவர் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர்.

இவரது கடைக்கு 35 வயது மதிக்கத்தக்க ஜப்பான் நாட்டையைச் சேர்ந்த பெண் சுற்றுலா பயணி ஒருவர் வந்து சங்கு மற்றும் பொருட்களை வாங்கினார்.

அதன் பிறகு அந்த பெண் தான் தங்குவதற்கு அறை வசதி செய்து தர முடியுமா? என்று தேஜாபவாரிடம் கேட்டுள்ளார். அவரும் தான் தங்கி உள்ள அறைக்கு அந்த பெண்ணை அழைத்துச் சென்று தங்க வைத்துள்ளார். பிறகு உணவு வாங்கி வருவதாக வெளியில் சென்ற தேஜாபவார் சிறிது நேரம் கழித்து அங்கு வந்தார்.

பிறகு அந்த சுற்றுலா பயணியை கத்தியை காட்டி மிரட்டி கற்பழித்தார். அதன் பிறகு அந்த பெண்ணை தனது அறையில் இருந்து விரட்டி விட்டு அவர் சென்று விட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஜப்பான் நாட்டு பெண், தான் கற்பழிக்கப்பட்டது பற்றி கோவளம் கடற்கரை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி தேஜாபவாரை கைது செய்தனர். அவர் இதுபோல வேறு சுற்றுலா பயணிகளிடம் அத்துமீறி நடந்து உள்ளாரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.

கேரள சுற்றுலா தளங்களில் இதுபோன்ற அத்து மீறல்கள் அதிகரித்து இருப்பதால் போலீசார் கண் காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். மேலும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு காமிரா அமைக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெறும் 1 நொடியில் உலகத்தையே மறந்து சிரிக்க வைக்கும் காட்சி!.. மிஸ் பண்ணிடாதீங்க…!! வீடியோ
Next post சமூக சேவையில்தான் மன அமைதி கிடைக்கிறது: சமந்தா சொல்கிறார்…!!