30 வயதுக்கு மேல் உடலில் ஏற்படும் மாற்றங்கள்…!!

Read Time:3 Minute, 24 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-6மனிதர்களின் வயது அதிகரிக்க அதிகரிக்க அவர்களின் உடலிலும் மாற்றங்கள் ஏற்படும்.

உடலில் ஏற்படும் மாற்றங்கள் இருபாலருக்கும் பொருந்தும் என்றாலும், பெண்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்.

அதுவும் 30 வயதுக்கு மேல் பெண்களின் உடல் வலிமை குறைய, மாதவிடாய் பிரச்சனை போன்றவற்றில் அதிக பாதிப்பு ஏற்படும்.

30 வயதுக்கு மேல் பெண்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் இதோ,

முப்பது வயதுக்கு பிறகு பெண்களுக்கு கருவளம் குறைய ஆரம்பிக்கிறது, இதனால் இவர்கள் குழந்தை பெற்றுக்கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது.

சில பெண்களுக்கு மோசமான மாதவிடாய் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன. தசை வலிகள், ஐந்து நாட்களும் கடினமாக இரத்தப் போக்கு ஏற்படுவது போன்ற பிரச்சனைகள் ஏற்படும்

பெண்களுக்கு வளர்சிதை மாற்றம் மெல்ல, மெல்ல குறைய ஆரம்பிக்கும். இந்த வயதுக்கு மேல் பெண்கள் அதிக இரும்புச்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளவது நல்லது.

முப்பது வயதுக்கு மேல் பெண்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனையும் வரும். சிறுநீரக பை வலுவிழப்பு மற்றும் குழந்தை பிறப்பு போன்றவை இதற்கான காரணிகளாக இருக்கின்றன.

முகத்தில் சுருக்கம் ஏற்படுவதற்கு அடுத்து, வெளிப்படையாக தெரியும் இரண்டாவது பெரிய மாற்றம் நரைமுடி.

முப்பது வயதுக்கு பிறகு குழந்தைகளுக்கு தாய்பால் தருவது போன்ற காரணங்களினால் மார்பகங்கள் இறுக்கம் குறைந்து தொங்குவது போல உருமாறும்.
உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால், நகங்களின் வலு குறைந்துவிடுவதால், நகங்கள் எளிதில் உடைந்துவிடும்.

30 வயதுக்கு மேல் சதைகள் வலுவிழந்து போவதால், ஏதேனும் காயங்கள் ஏற்பட்டால் அது குணமாவதற்கு சிறிது காலம் எடுக்கும். அதுமட்டுமின்றி எலும்பு தேய்மானம் ஏற்படும் என்பதால் கால்சியம் சத்துள்ள உணவுகளை சாப்பிடுவது நல்லது.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மகளிர் பக்கம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமணத்துக்கு சில மணி நேரம் முன்பு ராணுவ வீரர் சுட்டுக்கொலை…!!
Next post தனுஷ் என் மகன் தான் என்று அனைவருக்கும் தெரியும்: கஸ்தூரிராஜா…!!