விமானத்தில் ரூ.3.5 கோடி கடத்திய எம்.பி. மருமகன் கைது…!!

Read Time:2 Minute, 15 Second

201611241559101405_bjp-mp-nephew-arrested-for-rs35-crore-kidnapping-in-plane_secvpfநாகலாந்து மாநிலத்தின் நாசா மக்கள் முன்னணி கட்சி தலைவர் கெகிகோ ஜிமோமியின் மகன் அனாடோ. இவர் நாகலாந்து முன்னாள் முதல்-மந்திரியும் தற்போதைய பா.ஜனதா கூட்டணி எம்.பி.யுமான நெபியோ ரியோவின் மருமகன் ஆவார்.

அனாடோ ரூ.3.5 கோடி பணத்துடன் திமாபூர் விமான நிலையம் சென்றார். அவை அனைத்தும் ரூ.500, ரூ1000 நோட்டுகள் ஆகும். விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்திய போது ரூ.3.5 கோடி பணம் சிக்கியது. அப்போது அந்த பணம் திடீர் என்று மாயமாகி விட்டது.

இது பற்றி விசாரணை நடந்து கொண்டிருந்த போது அனாடோ அங்கிருந்து தனியார் விமானம் மூலம் அரியானா மாநிலம் ஹிசார் சென்றார். அங்கு விமான நிலையத்தில் சோதனையிட்ட போது ரூ.3.5 கோடி பணம் சிக்கியது. அது சட்டப் படியான பணம் என்றும் விவசாயத்தின் மூலம் கிடைத்த வருமானம் என்றும் தெரிவித்தார். மேலும் இதற்கு வருமான வரித்துறையின் சான்றிதழ் இருப்பதாகவும் கூறி அதை காண்பித்தார்.

திமாபூர் விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட பணத்தை அனாடோ தனது நண்பர்கள் மூலம் கடத்தி தான் பயணம் செய்ய இருக்கும் மற்றொரு விமானத்துக்கு கொண்டு சென்றது தெரியவந்தது

இதையடுத்து அனாடோ பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அவரிடம் கைப்பற்றப்பட்டது கறுப்பு பணம் என்றும் வெள்ளை பணமாக மாற்ற கடத்திச் செல்லப்பட்டது தெரிய வந்தது.

அந்தப் பணம் யாருடையது என்று வருமான வரித் துறையினர் விசாரித்து வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தூக்கில் இளம்பெண் பிணம்: கணவரை கைது செய்யக்கோரி சாலை மறியல்…!!
Next post விபசார விடுதியில் ரூ.20 லட்சத்துக்கு விற்பனை- பணம் மாற்ற முடியாததால் இளம்பெண் தப்பினாள்..!!