சிறையில் சடலமாக கிடந்த பெண் கைதி: கொலையா? தற்கொலையா?

Read Time:2 Minute, 12 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-3சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள சிறைச்சாலையில் பெண் கைதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸின் பேர்ன் மாகாணத்தில் உள்ள தூன் நகர சிறைச்சாலையில் தான் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதே சிறைச்சாலையில் பல்வேறு குற்றங்களுக்காக 61 வயதான பெண் ஒருவர் கைதியாக அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று காலை 9 மணியளவில் சிறை பாதுகாவலர் ஒருவர் ஒவ்வொரு அறையாக கண்காணித்து வந்துள்ளார்.

அப்போது, பெண் கைதியின் அறைக்கு சென்றபோது அவர் தரையில் படுத்துக் கிடந்துள்ளார்.

கைதியிடம் எவ்வித அசைவுகளும் இல்லாததால் சந்தேகம் அடைந்த காவலர் அருகில் சென்று பார்த்துள்ளார்.

அப்போது, பெண் கைதி சுயநினைவு இன்றி கிடந்துள்ளார். மருத்துவரை அழைத்து சோதனை செய்து பார்த்தப்போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும், சடலத்தை கூர்ந்து பரிசோதனை செய்ததில் அவர் தற்கொலை செய்ததாகவும், மற்றொருவர் கொலை செய்ததாகவும் எவ்வித தடயங்களும் கண்டுபிடிக்க முடியவில்லை.

எனினும், சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ள பொலிசார், பரிசோதனை முடிவுகள் வெளியான பின்னரே கைதியின் மரணம் தொடர்பான மர்மம் விலகும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சிறைச்சாலையில் பெண் கைதி ஒருவர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வவுனியா விபத்து ஒருவர் வைத்தியசாலையில்…!!
Next post அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகும் அமலாபால்- இப்போது யாருடன் தெரியுமா?