‘ரெமோ’ தெலுங்கில் 500 தியேட்டர்களில் ரிலீஸ்…!!

Read Time:1 Minute, 54 Second

201611231459352943_remo-telugu-release-500-theaters_secvpfசிவகார்த்திகேயன்- கீர்த்திசுரேஷ் நடித்த ‘ரெமோ’ கடந்த மாதம் 7-ந் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இந்த படத்தை தெலுங்கில் வெளியிட ஏற்பாடுகள் நடந்தன. கடந்த 1-ந் தேதி ‘ரெமோ’ தெலுங்கு பாடல் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடந்தது.

பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளர் தில்ராஜூ, தமிழில் இதை தயாரித்த ‘24 ஏ.எம் ஸ்டூடியோஸ்’ நிறுவனத்துடன் இணைந்து ‘ரெமோ’ வை தெலுங்கில் வெளியிடுகிறார். பாக்யராஜ் கண்ணன் இயக்கிய இந்த படத்துக்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார். பவன் கல்யாண் நடிக்கும் புதிய படத்தில் அவரது ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். அந்த படத்துக்கும் அனிருத் இசை அமைக்கிறார்.

இதனால் தெலுங்கு ரசிகர்களிடையே ‘ரெமோ’ படத்துக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இதுதவிர தமிழைப் போலவே தெலுங்கு பதிப்புக்கும் பிரமாண்டமாக விளம்பரங்கள் செய்துள்ளனர். தெலுங்கில் ‘டப்பிங்’ செய்யப்பட்டுள்ள இது தெலுங்கில் வெளியாகும் சிவகார்த்திகேயனின் முதல் படமாக இருந்தாலும் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் 500 தியேட்டர்களில் ‘ரிலீஸ்’ ஆக இருக்கிறது. வருகிற 25-ந் தேதி தெலுங்கு ‘ரெமோ’ அங்கு திரைக்கு வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரூபாய் நோட்டு பிரச்சினை: உத்தரபிரதேசத்தில் கல்லூரி மாணவர் தற்கொலை…!!
Next post சிநேகாவை பிடிக்க இதுதான் காரணம்: பிரசன்னாவின் காதல் பதில்…!!