மன அழுத்தத்தைப் பற்றி உளவியாளர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?

Read Time:4 Minute, 16 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90மன அழுத்தம் பல்வேறு காரணங்களால் உருவாகலாம். பல நேரங்களில் நிபுணர்கள் கூட இதற்கான காரணத்தை குறிப்பிட்டுக் கூற இயலாமல் போவதற்கு வாய்ப்புண்டு. நிறைய பேர் ஏன் நாமே இதன் பாதிப்பிற்குள்ளாகலாம்.

மன அழுத்தம் வருவதற்கு சில பொதுவான முக்கிய காரணங்களாக வேலை நெருக்கடிகள், மூளையில் ஏற்படும் வேதியியல் சமநிலையின்மை, முறையற்ற உறவுமுறைகள், பிரிவு, குடும்ப சீர்குலைவு, சுயகவுரவத்தின் வீழ்ச்சி ஆகியவைகளைக் கூறலாம். சில வேளைகளில் மன அழுத்தமானது ஷிசோப்ரெனியா மற்றும் பைபோலர் டிசார்டர் போன்ற தீவிர மன நோய்களால் கூட ஏற்படக்கூடும்

பல நேரங்களில் நமக்கு மருத்துவ நிபுணர்கள் அறிந்துவைத்துள்ள சில உண்மைகள் நமக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே உளவியளாளர்கள் இது குறித்துத் தரவிருக்கும் ஆச்சரியமூட்டும் தகவல்களை இப்போது நாம் பார்க்கப் போகிறோம்.

மன அழுத்தம் வெறும் ஒரு சொல்லாகத்தான் பலரால் பார்க்கப் படுகிறது. ஆனால் அது தீர்வும் சிகிச்சையும் தேவைப்படும் ஒரு தீவிர மனநோய்.

உண்மையென்னவென்றால் மன அழுத்ததினால் பாதிக்கப் பட்டவர்கள் பெரும்பாலும் சோகம் மற்றும் பிற அறிகுறிகளை வெளிப்படுத்தமாட்டார்கள். ஆனால் பெரும்பாலான செயல்களில் ஈர்ப்பின்றி செயல்படுவார்கள். இது மற்றவர்களால் கவனிக்க இயலாது என்பது இதில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று.

மேலும் பலர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஒருவர் ஒருவழியாக அதிலிருந்து மீண்டுவிடுவார் என நினைப்பதுண்டு. ஆனால் பெரும்பாலான நேரங்களில் மன அழுத்தமானது சரியான சிகிச்சையினால் மட்டுமே முழுமையாக குணப்படுத்த இயலும்

மன அழுத்தத்தைப் பற்றிய மற்றுமொரு உண்மை என்னவென்றால் மன அழுத்தம் போக்கும் மருந்துகள் பெரும்பாலும் தற்காலிக நிவாரணிகளே. எனவே மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஒருவருடைய மன நிலையை ஆழ்ந்து புரிந்து கொள்வது நீண்டகால மாற்றத்தைத் தரக்கூடிய சிகிச்சைக்கு உதவும்.
பெரும்பாலான பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளிடம் மன அழுத்ததிற்கான அறிகுறிகள் தென்பட்டால், அது குழந்தைத் தனம் அதுவாகவே சரியாகிவிடும் என நினைப்பதுண்டு. ஆனால் அது ஆணோ பெண்ணோ, இந்த மன அழுத்த நோயானது எந்த வயதினரையும் பாதிக்கும் என்பதுடன் இதற்கு சிகிச்சை மிகவும் அவசியம்.

பலர் சோகம் மட்டுமே மன அழுதத்தின் அறிகுறி என நினைப்பர். ஆனால் மன அழுத்தம் செயல்பாடுகள் மற்றும் பேச்சில் தீவிரத் தன்மை, வெறுப்பு, சோர்வு என பிற அறிகுறிகளையும் கொண்டிருக்கும்.

*** இதுபோன்ற “அவ்வப்போது கிளாமர்” செய்திகளை பார்வையிட இங்கே அழுத்தவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பூனை இறந்ததற்கு ரூ.2½ கோடி நஷ்டஈடு கேட்கும் பெண்…!!
Next post 500 ரூபாய் நோட்டை வாங்க தந்தை மறுத்ததால் மகள் கற்பழிப்பு…!!