உலகில் முதல் தலைமாற்று சத்திர சிகிச்சை! வரலாற்று சாதனை படைக்கும் மருத்துவர்கள்…!! வீடியோ

Read Time:2 Minute, 51 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70-3ஒரு நபரின் உடலில் வெட்டி அகற்றப்பட்ட பாகங்கள் மற்றவர்களுக்கு பொருத்தும் சத்திரசிகிச்சை பற்றி நாம் கேள்விபட்டிருப்போம்.

பிற நபரிடம் இருந்து பெறப்பட்ட சிறுநீரகம், கண் ஆகியன மற்றவர்களுக்கு சத்திரசிகிச்சை மூலம் பொருத்தப்பட்டு வருகிறது.

ஆனால், ஒருவரின் தலை மற்றுமொருவரின் உடலில் பொருத்தப்பட்ட சத்திர சிகிச்சை பற்றி நீங்கள் கேள்விபட்டுள்ளீர்களா?.

உலகில் மிகவும் ஆபத்தான சத்திர சிகிச்சையான இந்த சத்திர சிகிச்சையை மேற்கொள்ள மருத்துவர்கள் குழுவொன்று தயாராகி வருகிறது.

தனது அங்கவீனமான உடலுக்கு பிரிதொரு உடலை பொருத்தும் இந்த ஆபத்தான சத்திர சிகிச்சைக்கு ரஷ்யாவை சேர்ந்த இளைஞர் இணங்கியுள்ளார். வெலரி ஸ்பிரிடனோவ் என்ற இந்த இளைஞர் அங்கவீனம் காரணமாக சக்கர நாற்காலியை பயன்படுத்தி வருகிறார்.

இந்த சத்திரசிகிச்சை வெற்றியளித்தால், மூளை சாவடைந்த ஒருவரின் உடலை தனது தலையை பொருத்தி சாதாரண வாழ்க்கையை வாழ முடியும்.

எவ்வாறாயினும் இந்த சத்திர சிகிச்சையானது ஆயிரம் மடங்கு மிகவும் ஆபத்து நிறைந்த சத்திர சிகிச்சையாகும். சத்திர சிகிச்சை தோல்வியடைந்தால், அங்கவீனமடைந்த இந்த இளைஞன் மரணத்தை சந்திப்பார்.

இது சம்பந்தமாக கருத்து வெளியிட்டுள்ள மருத்துவர்கள் குழு, இந்த சத்திர சிகிச்சை எந்த வகையிலும் தோல்வியடையாது என கூறியுள்ளனர்.

எவ்வாறாயினும் இந்த சத்திர சிகிச்சை ஆபத்தானது என்பதையும் அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இவ்வாறான சூழ்நிலையில், லண்டனை சேர்ந்த மருத்துவர்கள் குழு சத்திர சிகிச்சைக்கு தயாராகி வருகின்றனர். இதில் வெற்றி பெற முடியும் என மருத்துவர்கள் குழு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

சத்திர சிகிச்சை வெற்றிப் பெற்றால், உலகில் உடல் அங்கவீனமாக வாழ்ந்து வரும் மக்களுக்கு புதிய எதிர்பார்ப்பை உண்டாகும் என்பது நிச்சயம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எலியை பிடித்து தூக்கி செல்லும் இராட்சத சிலந்தி…!! வீடியோ
Next post எந்தவொரு தாய்க்கும் இது நடக்ககூடாது! நெஞ்சை பதற வைக்கும் உண்மை சம்பவம்…!!