வேகவைத்தாலும் வேலை செய்யும் ஐபோன் : வைரலாகும் வீடியோ…!!

Read Time:2 Minute, 44 Second

iphoe_boiled_001-w245உலக டெக் சந்தையில் அதிகப் பிரபலமான ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் கருவிகள் வெளியாகும் முன் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும். பின் கருவி வெளியானதும் அதன் சோதனைகள் உலகெங்கும் நடத்தப்படும்.

யூட்யூபில் ஐபோன் டார்ச்சர் டெஸ்ட் என டைப் செய்தால் நீங்களே அதிர்ந்து போகுமளவு புதிய ஐபோன்களைக் கண்டபடி டார்ச்சர் செய்திருப்பர். இங்கு ஒருவர் புதிய ஐபோன் வாட்டர் ப்ரூப் என்பதால் கொதிக்கும் நீரில் அதனை வேக வைக்கிறார். அதன் பின் என்னவாகிறது என்பதை இங்குப் பாருங்கள்..

டெக்ராக்ஸ் எனும் யூட்யூப் சேனலில் தான் ஐபோன் வேக வைக்கப்படும் வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ செப்டம்பர் 16 ஆம் தேதியன்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

நன்கு வேலை செய்யும் புத்தம் புதிய ஐபோன் 7 கொதிக்கும் நீரில் அப்படியே போடப்படுகிறது. பின் சிறிது நேரத்தில் ஐபோன் திரை ஆஃப் ஆகிக் கொஞ்ச நேரம் கருவி அப்படியே இருக்கிறது.

பின் சிறிது நேரம் கழித்து ஐபோன் வெளியே எடுக்கப்பட்டதும் ஐபோன் திரையில் கருவி அதிகச் சூடாக இருக்கிறது, குளிர்ந்த பின் நீங்கள் இதனைப் பயன்படுத்த முடியும் என்ற தகவல் தெரிகிறது.

வெளியே எடுக்கப்பட்ட கருவி சிறிது நேரம் கழித்து அனைத்து அம்சங்களும் சோதிக்கப்படுகிறது. இதில் கேமரா நன்கு வேலை செய்வது தெரிகிறது. மற்ற அம்சங்களும் சீராக இயங்குகிறது.

ஐபோன் 7 வாட்டர் ப்ரூப் அம்சம் கொண்டுள்ளது என்றாலும் கொதிக்கும் நீரில் போட்ட பின்பும் வேலை செய்யுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மருத்துவ மாணவர்களின் வெறிச்செயல்: வைரலாகும் வீடியோ..!!
Next post வேகமாக உண்ணும் போட்டி: அரிசி உருண்டை சாப்பிட்ட ஜப்பான் இளைஞருக்கு நேர்ந்த கதி…!!