பாண்டாஸ்டிக் பீஸ்ட்ஸ்…!! விமர்சனம்

Read Time:4 Minute, 19 Second

201611221832328747_fantastic-beasts-movie-review_medvpfநடிகர் எடி ரெட்மயன்
நடிகை அலிசன் சுடோல்
இயக்குனர் டேவிட் ஏட்
இசை ஜேம்ஸ் நியூட்டன் ஹோவர்ட்
ஓளிப்பதிவு பிலிப் ரூஸ்செலோட்

அமெரிக்காவில் திடீரென ஒரு தாக்குதல் நடக்கிறது. இந்த தாக்குதலுக்கு தீய சக்திகளின் தலைவனான ஹிரிண்டல் வால்ட் காரணமாக இருக்குமோ என்ற அச்சம் அமெரிக்காவில் நிலவுகிறது. இதனால், மாயாஜால உலகிற்கும் சாதாரண மக்களுக்கும் இடையே போர் நிலவுமோ என்ற அச்சம் நிலவுகிறது.

இதனை தடுப்பதற்காக மாயாஜால சமூகம் ஏற்கெனவே மாய விலங்குகளை வளர்க்க விதிக்கப்பட்ட தடையை மேலும் அதிகமாக்குகிறது. இந்நிலையில், நாயகன் எடி ரெட்மயானே மாய விலங்குள் அடங்கிய உலகத்தை ஒரு சூட்கேசில் வைத்துக் கொண்டு நியூயார்க் நகரத்துக்கு வருகிறான்.

அந்த சூட்கேசுக்குள் இருக்கும் மிகப்பெரிய ராட்சத பறவையை அமெரிக்காவின் அரிசோனா காடுகளில் விட்டுச் செல்வதற்காக வருகிறான். ஆனால், அதற்குள் அவனுடைய சூட்கேஸ் பறிபோய்விடுகிறது. இந்நிலையில், அந்த சூட்கேசுக்குள் இருக்கும் மாய விலங்குகள் எல்லாம் வெளியே வந்துவிடுகிறது.

இந்நிலையில், அமெரிக்காவில் அடுத்தடுத்து தாக்குதல் நடத்துகிறது. இதையெல்லாம் அறியும் மாயாஜால சமூகம் சூட்கேசுக்குள் இருந்து வெளியே வந்த விலங்குகள்தான் இந்த தாக்குதலுக்கு காரணம் என்று எண்ணுகின்றனர். எனவே, அந்த விலங்குகளை கொண்டு வந்த நாயகனை தேடிக் கண்டுபிடித்து அவனுக்கு மரண தண்டனை நிறைவேற்ற முடிவெடுக்கிறார்கள்.

இதிலிருந்து நாயகன் எப்படி மீண்டு வந்தார்? அந்த விலங்குகளை எப்படி அவர் மீட்டுக் கொண்டு வந்தார்? என்பதே மீதிக்கதை.

இந்த படம் ஹாரிபார்ட்டருக்கு 70 வருடத்துக்கு முந்தைய காலக்கட்டத்தில் நடக்கும் கதையாக உருவாகியிருக்கிறது. அந்த காலக்கட்டத்தில் உள்ள கட்டிடங்களை அழகாக உருவாக்கியிருக்கிறார்கள். அவை கிராபிக்ஸ் என்பதையும் மீறி தத்ரூபமாக இருப்பதாக சிறப்பு.

அதேபோல், கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் உருவாக்கியுள்ள ஒவ்வொரு மிருகங்களும் பார்ப்பதற்கு ரொம்பவுமே ரசிக்க வைக்கின்றன. அதிலும், குறிப்பாக, திருடுவதையே வேலையாக கொண்டு வரும் மிருகம் செய்யும் சேஷ்டைகள் எல்லாம் சிரிக்க வைக்கின்றன. ராட்சத பறவை பார்க்கவே மிரள வைக்கிறது. இதேபோல், சூட்கேசுக்குள் இருக்கும் உலகத்தை மிகவும் அழகாக காட்டியிருக்கிறார்கள்.

அந்த உலகத்திற்குள் வாழும் ஒவ்வொரு மிருகமும் எந்த சூழ்நிலையில் வாழவேண்டுமோ அந்த சூழ்நிலைக்கேற்றவாறு அந்த உலகத்தை படைத்திருப்பது ரொம்பவும் ரசிக்கக்கூடியதாக இருக்கிறது. படத்திற்கு பெரிய பலமே கிராபிக்ஸ் காட்சிகள்தான். படம் முழுக்க கிராபிக்ஸ் நிறைந்திருந்தாலும், அவை எல்லாமே தத்ரூபமாக இருக்கும்படி அமைத்திருக்கிறார்கள்.

மொத்தத்தில் ‘பேண்டஸ்டிக் பீஸ்ட்ஸ்’ பிரமிப்பு.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வயிற்றில் கட்டி வளர்வது தெரியாமல் கர்ப்பமாக இருப்பதாக கூறி பெண்ணுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள்…!!
Next post இந்த மாதிரி ஐஸ்கிரீமை வீட்டில் செய்து தந்தா எப்படி இருக்கும்? வீடியோ