ஜப்பானை தாக்கிய சுனாமி: பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்…!! வீடியோ

Read Time:1 Minute, 41 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-4ஜப்பான் நாட்டில் இன்று அதிகாலை நேரத்தில் 7.4 என்ற ரிக்டார் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடந்து தற்போது மேற்கு ஜப்பானை சுனாமி தாக்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் இன்று அதிகாலை 5.59 மணியளவில் 7.4 என்ற ரிக்டார் அளவில் நிலநடுக்கம் தாக்கியதால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.

மேலும், புகுஷிமா தீவில் இருந்து 6 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் அங்குள்ள அணு உலைகளுக்கு பெரும் ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மேற்கு ஜப்பானை சுனாமி தாக்கியுள்ளதாக தற்போது அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சுனாமி அலைகள் சுமார் 4.5 அடி உயரம் வரை எழும்பியுள்ளதாகவும், இது புகுஷிமாவில் இருந்து சுமார் 70 கி.மீ தொலைவில் காணப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், இந்த சுனாமி அலைகள் சுமார் 10 அடி உயரம் வரை நிகழும் ஆபத்து உள்ளதால் மேற்கு ஜப்பானை சுற்றியுள்ள பொதுமக்கள் அவசர அவசரமாக பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நியூசிலாந்தில் மீண்டும் நிலநடுக்கம்! அச்சத்தில் மக்கள்..!!
Next post பள்ளி வாகனம் மரத்தில் மோதிய விபத்தில் 6 குழந்தைகள் பலி…!!