காதலனை நம்பி வந்தவருக்கு நேர்ந்த கொடுமை: மாணவியை ஏமாற்றி விபசாரத்தில் தள்ளிய கும்பல்…!!
திருவனந்தபுரம் அருகே உள்ள போத்தன்கோடு தலித்காலனியைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென வீட்டில் இருந்து மாயமானார்.
இதனால் அவரது பெற்றோர் போத்தன்கோடு போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தநிலையில் அந்த மாணவி திடீரென வீடு திரும்பினார்.
அவர் மாயமானது பற்றி அவரிடம் பெற்றோர் விசாரித்த போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. அந்த மாணவி அதே பகுதியைச் சேர்ந்த அனிஷ்ராபி(வயது24) என்ற வாலிபரை காதலித்து உள்ளார்.
ஆனால் அந்த வாலிபர் மாணவியை காதலிப்பது போல் நடித்து அவரது வாழ்க்கையை சீரழித்தது தெரிய வந்தது. இது பற்றி போத்தன்கோடு போலீசில் புகார் செய்யப்பட்டது.
அந்த மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அந்த மாணவி பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அந்த மாணவியை திருமண ஆசைகாட்டி காதலன் அனிஷ்ராபி வீட்டில் இருந்து அழைத்துச் சென்று உள்ளார்.
பிறகு தனது நண்பர் அனூப்கிருஷ்ணன் என்பவர் ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு ஒரு பங்களாவுக்குச் சென்ற காதலன் அங்கு வைத்து அந்த மாணவியை மிரட்டி கற்பழித்து உள்ளார்.
அதைத் தொடர்ந்து அனூப் கிருஷ்ணனை ஆட்டோவில் ஏற்றி அவரை வீட்டில் விடும் படி கூறிவிட்டு காதலன் சென்று விட்டார்.
மாணவியுடன் ஆட்டோவில் சென்ற அனூப் கிருஷ்ணன் அவரை ஆலப்புழாவைச் சேர்ந்த பிலோமினாள்(38) என்ற பெண் விபசார புரோக்கரிடம் ஒப்படைத்து விட்டு தப்பி விட்டார்.
அதன்பிறகு அந்த மாணவியை மிரட்டி ஆபாச படம் எடுத்த பெண் புரோக்கர் அந்த மாணவியை விபசாரத்தில் தள்ளினார். ஆன்லைன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தகவல் கொடுத்து மாணவியை அவர்களுக்கு விருந்தாக்கிய கொடுமை தொடர்ந்தது.
திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள லாட்ஜூகளுக்கு அந்த மாணவியை அழைத்துச் சென்றும் பெண் புரோக்கர் விபசாரத்தில் ஈடுபடுத்தி உள்ளார்.
மேலும் ஆட்டோ டிரைவர் அனூப்கிருஷ்ணன் உதவியுடன் அந்த மாணவியை கன்னியாகுமரி, நாகர்கோவிலுக்கு அழைத்து வந்து இங்கும் பலருக்கு விருந்தாக்கி உள்ளனர். கன்னியாகுமரியில் அந்த மாணவியை மருத்துவ பிரதிநிதி ஒருவர் கற்பழித்த கொடுமையும் நடந்து உள்ளது.
பெண் புரோக்கரின் கொடுமை அதிகரித்ததால் அந்த மாணவி 2 முறை தற்கொலைக்கு முயன்று உள்ளார். இதனால் அந்த பெண் புரோக்கர் மாணவியை மீண்டும் அவரது ஊருக்கு அழைத்துச் சென்று விடுவித்துள்ளார். இதுபற்றி வெளியில் சொன்னால் அவரையும் அவரது குடும்பத்தினரையும் கொன்று விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இந்த தகவல்களை போலீசாரிடம் கூறி மாணவி கதறினார்.
இதைத் தொடர்ந்து போத்தன்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து பெண் புரோக்கர் பிலோமினாள், காதலன் அனிஷ்ராபி, ஆட்டோ டிரைவர் அனூப்கிருஷ்ணன், மாணவியை கற்பழித்தவர்கள் உள்பட 11 பேரை கைது செய்தனர்.
மருத்துவ பிரதிநிதி உள்பட மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். இது தொடர்பாக போத்தன்கோடு போலீசார் கன்னியாகுமரி, நாகர்கோவில் வந்து விசாரணை நடத்தி உள்ளனர்.
Average Rating