வாலு பட இயக்குனருடன் கைகோர்த்த விக்ரம்…!!
‘இருமுகன்’ வெற்றிக்கு பிறகு விக்ரம் அடுத்ததாக யார் படத்தில் நடிக்கப்போகிறார் என்பது பெரிய கேள்விக்குறியாகவே இருந்து வந்தது. ஹரி இயக்கத்தில் ‘சாமி-2’ படத்தில் விக்ரம் நடிப்பது உறுதியாகிவிட்டாலும், அடுத்த வருடம்தான் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கப்போவதாக அறிவித்திருந்தனர்.
சசிகுமாரை வைத்து ‘பிரம்மன்’ என்ற படத்தை இயக்கிய சாக்ரடீஸ் இயக்கும் புதிய படத்திலும் விக்ரம் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியானது. அதேபோல், ‘இருமுகன்’ படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கத்தில் மறுபடியும் விக்ரம் நடிக்கப்போவதாக செய்திகளும் வெளிவந்தது. ஆனால், இதில் எதுவுமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
இந்நிலையில், விக்ரம் அடுத்ததாக ‘வாலு’ படத்தை இயக்கிய விஜய் சந்தர் இயக்கத்தில் நடிக்கப்போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தை SFF என்ற பட நிறுவனம் தயாரிக்கவுள்ளது. மாறுபட்ட கதையம்சம் கொண்ட கதைக்களமாக இப்படம் உருவாகவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இப்படத்தை மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளார்களாம். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், விரைவில் இப்படத்தின் தலைப்பு, நாயகி மற்றும் பிற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் விவரங்களை வெளியிடவுள்ளனர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating