பிரிட்டனில் பாதுகாப்பை மீறி பாஸ்போர்ட் இல்லாமல் விமானத்தில் ஏறிய சிறுவன்

Read Time:1 Minute, 47 Second

uk.gifபலஅடுக்கு பாதுகாப்பு வளையத்தை மீறி விமான நிலையத்துக்குள் சர்வசாதாரணமாக நுழைந்து சர்வதேச விமானத்தில் ஏறிவிட்டான் சிறுவன். இச்சம்பவம் லண்டனில் உள்ள கேட்விக் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த திங்கள்கிழமை நடந்துள்ளது. மெர்ஸிசைட் என்ற இடத்தில் காப்பகம் ஒன்றில் இருந்து தப்பி லண்டனுக்கு ரயிலில் வந்த அச்சிறுவன், கேட்விக் விமான நிலையத்தின் தெற்கு டெர்மினல் அருகே விமான நிலையத்துக்குள் நுழைந்துள்ளான்.

விமான நிலையத்தில் எந்தவித பாதுகாப்பு சோதனைகளுக்கும் உட்படாமல் சர்வசாதாரணமாக விமான நிலையத்துக்குள் நுழைந்து விட்டான். போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனுக்குச் செல்லும் விமானப் பயணிகளுடன் வரிசையில் காத்திருந்து போர்டிங் பாஸ் இல்லாமல் விமானத்திலும் ஏறி விட்டான்.

ஆனால், கையில் போர்டிங் பாஸ் இல்லாததால், சீட் இல்லாமல் அவன் அலைந்து கொண்டிருந்ததைப் பார்த்த விமான ஊழியர்கள், இதுகுறித்து உடனடியாக போலீஸýக்குத் தகவல் தெரிவித்தனர். 2 போலீஸôர் விமானத்துக்குள் வந்து அச்சிறுவனை அழைத்துச் சென்றனர்.
இத்தகவலை “டைம்ஸ்’ பத்திரிகை வெளியிட்டிருந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கொழும்பு பேரணியில் அமளி
Next post தமிழக சட்டசபை தீர்மானத்திற்கு இலங்கை அரசின் மறுப்பறிக்கை