நாளை சூப்பர் நிலவு: வழக்கமானதை விட மிகப்பெரியதாக காட்சி அளிக்கும்…!!

Read Time:2 Minute, 34 Second

201611130912044600_tomorrow-super-moon-that-appears-to-be-bigger-than-normal_secvpf70 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே விண்ணில் ஏற்படும் ‘சூப்பர் நிலவு’ நாளை (திங்கட்கிழமை) நிகழ்கிறது. இதனை நாம் வெறும் கண்களாலேயே பார்க்கலாம்.

பூமியின் ஒரே துணைக்கோளான நிலா வழக்கத்தை காட்டிலும் சற்று பெரியதாக காட்சி அளிப்பது தான் ‘சூப்பர் நிலவு’. இந்த அதிசய நிகழ்வில் நிலா வழக்கத்தை விட 14 சதவீதம் பெரியதாகவும், 30 சதவீதம் அதிக ஒளியுடனும் பிரகாசமாக தோன்றும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

பூமியில் இருந்து சுமார் 3.84 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலா, அதன் நீள்வட்ட பாதையில் சுற்றி வருகிறது. ‘சூப்பர் நிலவு’ ஏற்படும்போது 48 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் நிலா பூமிக்கு அருகில் வந்து செல்லும்.

அதனாலேயே இந்த அதிசய நிகழ்வின்போது நிலா சற்று பெரியதாகவும், கூடுதல் ஒளியுடனும் காணப்படும் என்று கூறப்படுகிறது.

கடந்த 1948-ம் ஆண்டு சூப்பர் நிலவு தோன்றியதாகவும், அதன்பின்னர் நாளை மீண்டும் தோன்ற உள்ளதாகவும் நாசா தெரிவித்து உள்ளது. அந்த சமயத்தில் நிலா எப்படி இருக்கும்? என்ற படத்தையும் நாசா வெளியிட்டு உள்ளது.

இந்தியாவில் வானம் தெளிவாக இருக்கும் பட்சத்தில் வெறும் கண்களாலேயே சூப்பர் நிலவை பார்க்கலாம். தொலைநோக்கி மூலமாகவும் பார்த்து ரசிக்கலாம். அதிக ஒளியுடன் இருப்பதால் நிலா சிவப்பு நிறத்தில் தெரியும்.

நாளைய சூப்பர் நிலவை பார்க்க முடியாவிட்டால் கவலைப்பட வேண்டாம். அடுத்த மாதம் (டிசம்பர்) 14-ந்தேதி மீண்டும் சூப்பர் நிலவு நிகழும். அதனை பார்த்துக்கொள்ளலாம். இதுவும் பெரியதாக தான் இருக்கும்.

அதனையும் பார்க்காவிட்டால், அடுத்த ஆண்டு (2017) டிசம்பர் மாதம் வரை காத்திருக்க வேண்டும்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆற்றிலே சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்பப் பெண்..!!
Next post கடலூரில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை…!!