இலங்கைத் தமிழ் அகதிகள் ஐவர் கடலில் மூழ்கி மரணம்

Read Time:2 Minute, 50 Second

Tamilnadu-1bmp.jpgஇலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு கடல்வழியாக வந்துகொண்டிருந்த இலங்கைத் தமிழ் அகதிகள் படகு ஒன்று, இன்று வியாழக்கிழமை மாலை நடுக்கடலில் மூழ்கியதில் ஐந்து பேர் உயிரிழந்திருப்பதாக மண்டபம் பகுதியைச்சேர்ந்த தமிழக காவல்துறை அதிகாரிகள் சற்று முன்ன்னர் தெரிவித்தனர். இறந்தவர்கள் அனைவரும் இலங்கையின் மன்னார் மாவட்டத்திலுள்ள வங்காலை கிராமத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

புனிதவளன் என்பவரும் அவரது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளும், அவரது உறவுப்பெண்ணான நிரோஜினி என்கிற 19 வயது பெண்மனியும் இறந்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதில் நிரோஜினிக்கு நேற்று மாலை தான் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. அவரது கணவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

மொத்தம் 11 பேர் ஒரே படகில் வந்து கொண்டிருந்ததாகவும், நடுக்கடலில் இவர்களின் படகு முழ்கியதில் இவர்கள் அனைவரும் தண்ணீரில் தத்தளித்ததாகவும், அப்போது உடன் வந்துகொண்டிருந்த இன்னொரு படகில் இருந்தவர்கள் இவர்களில் ஆறுபேரை உயிருடன் மீட்டதாகவும், மீதமுள்ள ஐந்துபேர் கடலில் மூழ்கி இறந்துவிட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். இறந்தவர்களின் சடலங்களை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் மோதல்கள் மோசமானதைத் தொடர்ந்து தமிழகம் வரும் இலங்கை தமிழ் அகதிகளின் எண்ணிக்கை கடந்த சிலநாட்களாக மீண்டும் அதிகரித்துள்ளது. இன்று மட்டும் மாலைவரை சுமார் நூறுக்கும் அதிகமான அகதிகள் வந்திருப்பதாக கூறும் மண்டபம் பகுதி காவல் துறையினர், இரவான பின்னரும் அகதிகள் வந்த வண்ணம் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இந்த ஆண்டு மட்டும், இதுவரை ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கை தமிழ் அகதிகள் இந்தியா வந்துள்ளனர். சுமார் இருபதாயிரம் பேர் வரை இந்தியா வரக் காத்திருப்பதாக அங்கிருந்து வரும் அகதிகள் தெரிவிக்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தமிழீழத்தில் ஓருதமிழன் இருக்கும்வரை…
Next post இலங்கையின் வடக்கே யாழ்குடா நாட்டில் கடும் சண்டை