அமெரிக்க தேர்தல், வெற்றியின் விளிம்பில் டிரம்ப் : முக்கிய மாநிலங்கள் அவர் வசம்..!! (வீடியோ)

Read Time:2 Minute, 36 Second

15033570_595647273955685_4739080_nஅமெரிக்க தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் முக்கிய மாநிலமான புளோரிடாவில் ,டிரம்ப் வெற்றிபெற்றுள்ளதாக ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளன.தற்போதைய நிலவரத்தின் படி;டிரம்ப் வெற்றி பெறும் சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புளோரிடாவை அவர் வெற்றி பெறும் பட்சத்தில் இது உறுதியாகுமென தெரிவிக்கப்படுகின்றது.

ஹிலரி வெற்றி பெறுவார் என கருதப்பட்ட வடக்கு கெரோலினாவில் ,டிரம்ப் வெற்றி பெற்றுள்ளமையானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

டொனல்ட் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ;வெற்றிபெறும் அறிகுறி தெரிவதன் காரணமாக தங்கம் விலை உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.மேலும் ஜப்பானிய யென்னின் பெறுமதி அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் தற்போதைய நிலவரம்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் பெறுபேறுகள் வெளியாக ஆரம்பித்துள்ளன. இதுவரையில், ஹிலரி கிளின்டன் 104 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளார்.குடியரசு வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் 129 ஆசனங்களைப் பெற்றுள்ளார்இன்னும் உத்தியோகபூர்வு பெறுபேறுகள் வெளியாகவில்லை.

நடைபெற்று முடிந்த 58வது ஜனாதிபதி தேர்தலில், 45ஆவது அமெரிக்க ஜனாதிபதி தெரிவு செய்யப்படவுள்ளார்.அமெரிக்க தலைநகர் வொசிங்கடனுடன் சேர்த்து 51 மாநிலங்களில் வாக்களிப்புகள் நிறைவடைந்துள்ளன.மொத்தமாக 538 தொகுதிகள் உள்ளன.அவற்றில் குறைந்த பட்சம் 270 ஆசனங்களை கைப்பற்றுகின்ற கட்சியின் வேட்பாளர் ஜனாதிபதியாக தெரிவாவார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதலிக்க மறுத்த இளம்பெண் மீது ஆசிட் வீச்சு..!!
Next post சிறுநீரக மோசடி – மிரிஹான தடுப்பு முகாமில் இருந்த இந்தியர்கள் செய்த காரியத்தால் பரபரப்பு..!!