கரீனா கபூர் கருவில் வளரும் குழந்தையின் பாலினத்தை கண்டறியவில்லை: சயீப் அலிகான் மறுப்பு..!!

Read Time:2 Minute, 0 Second

201611081018031551_did-not-find-gender-of-the-kareena-kapoor-baby-grows-womb_secvpfஇந்தி திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் சயீப் அலிகான். இவருக்கும், நடிகை கரீனா கபூருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் கடந்த 2012-ம் ஆண்டு மண வாழ்க்கையில் இணைந்தனர்.

கடந்த ஜனவரி மாதம் சயீப் அலிகான் சமூக வலைதளம் மூலமாக கரீனா கபூர் கர்ப்பம் தரித்திருப்பதாகவும், டிசம்பரில் தங்களுக்கு முதல் குழந்தை பிறக்கும் எனவும் அறிவித்தார்.

இந்நிலையில் கரீனா கபூரின் கருவில் வளரும் குழந்தையின் பாலினம் கண்டறியப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியானது. மேலும் பிறக்கப்போகும் குழந்தைக்கு ‘சயீப்பீனா’ என்று பெயர் சூட்டியுள்ளதாகவும், லண்டனில் குழந்தை பெற்றுக்கொள்ள உள்ளதாகவும் தகவல் பரவியது.

இதற்கு பதிலளித்து நடிகர் சயீப் அலிகான் கூறியிருப்பதாவது:-

எங்கள் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்ததாகவும், லண்டன் சென்று குழந்தை பெற்றுக்கொள்ளப்போவதாகவும் கூறப்படும் தகவல் உண்மைக்கு புறம்பானது. பிறக்கப்போகும் குழந்தைக்கு கண்டிப்பாக சயீப்பீனா என்ற பெயரை வைக்க மாட்டோம். எனவே இனிமேலும் தேவையில்லாத வதந்திகளை பரப்பவேண்டாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நடிகர் சயீப் அலிகான் ஏற்கனவே திருமணமானவர். இவரது முதல் மனைவி அமிர்தா சிங். இவர்களுக்கு சாரா என்ற மகளும், இப்ராகிம் என்ற மகனும் உள்ளனர். இருவரும் 2004-ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்க தேர்தல் முடிவுகள் – ட்ரம்ப் முன்னிலையில்..!!
Next post அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் ட்ரம்ப்பை பின் தள்ளி ஹிலரி கிளின்டன் முன்னிலையில்..!!