இன்று ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல்?..!!

Read Time:1 Minute, 52 Second

139507251113011708954273ஒபாமாவின் பதவிக்காலம் நிறைவு பெறுவதால், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அமெரிக்காவில் இன்றைய தினம்;நடக்கிறது.

இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப், ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனுக்கும் கடும் போட்டி நிலவுகிறது.

இந்த தேர்தல் உலக முழுவதும் பரபரப்பாக உற்று நோக்கப்படும் நிலையில், தேர்தலுக்கு முந்தைய நாள் அமெரிக்காவில் அல்-கய்தா பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என அமெரிக்க புலனாய்வு அமைப்பு எச்சரித்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று;நடைபெறவுள்ள வேளையில், இதுபோன்ற மிரட்டல்கள் அதிகரித்து வருகின்றன

இந்த நிலையில் தேர்தல் இன்று இடம்பெறவுள்ள நிலையில், அமெரிக்காவை நோக்கி வட கொரியா ஏவுகணை வீசக்கூடும் என தென் கொரியா எச்சரிக்கை விடுத்து உள்ளது

3,000 கிலோமீட்டர் வரை செல்லக்கூடிய மசூடன் ஏவுகணையை வடகொரியா ஏவக்கூடும் என்று கூறப்பட்டது. அந்த ஏவுகணை அமெரிக்காவின் குவாம் மாநிலம் வரை செல்லக்கூடியது.

அண்மை நாட்களில், வடகொரியாவின் பயோன்கன் மாநிலத்தில் ஏவுகணைகள் தென்பட்டதாக தென்கொரிய ராணுவம் கூறியமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அக்கரைப்பற்றில் கோர விபத்து – ஸ்தலத்திலேயே இளைஞர் ஒருவர் பலி…!!
Next post மென்மையான கை கால்களின் அழகிற்கு..!!