அரசியலமைப்பு மாற்றம் தமிழருக்கு விடிவைத் தருமா? – கபில்..!! (கட்டுரை)

Read Time:14 Minute, 46 Second

sampanthannபோர் முடி­வுக்கு வந்து ஏழு ஆண்­டு­க­ளா­கியும் தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள் தீர்க்கப்பட­வில்லை, தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் அதி­கா­ரங்கள் பகி­ரப்­ப­ட­வில்லை என்ற குற்­றச்­சாட்­டு­களைச் சுமத்திக் கொண்­டி­ருக்கும் தமிழர் அர­சியல் தரப்பு, தமிழர் பிரச்­சி­னைக்கு எவ்­வாறு தீர்வு காண்­பது என்­பது தொடர்­பான எந்த உறு­தி­யான நிலைப்பாட்­டுக்கும் வர­மு­டி­யாத நிலை­யில்தான் இருக்­கி­றது.

மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்கம் பத­வியில் இருந்து அகற்­றப்­ப­டு­வ­தற்கு முந்­திய பல தசாப்­தங்­க­ளாக தமி­ழர்­களால் பேசப்­பட்டு வந்த பிர­தான விடயம், அதி­காரப் பகிர்வோ, தமி­ழீ­ழமோ அல்ல.

தமிழர் பிரச்­சி­னைக்­கான நிரந்­தர அர­சியல் தீர்வு என்­பது பற்­றியே, மைத்­தி­ரி­பால சிறிசேன அர­சாங்கம் பத­விக்கு வரும் வரையில் தமிழர் தரப்­பினால் பேசப்­பட்டு வந்த பிர­தான விட­ய­மாகும்.

ஜே.ஆர். ஜய­வர்­தன, பிரே­ம­தாச, டி.பி.விஜே­துங்க, சந்­தி­ரிகா குமா­ர­துங்க, மஹிந்த ராஜபக் ஷ என்று ஐந்து ஜனா­தி­ப­தி­களின் ஆட்­சிக்­கா­லத்தில் முதன்மை பெற்­றி­ருந்த அரசியல் தீர்வு என்ற விடயம், இப்­போது மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் ஆட்சிக்காலத்தில் முக்­கி­யத்­து­வ­மற்ற விட­ய­மாக மாறி­யி­ருக்­கி­றது.

தமிழர் பிரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு குறித்து முன்­னைய அர­சாங்­கங்­க­ளுடன், தமிழர் விடு­தலைக் கூட்­டணி பேசி­யது, பல்­வேறு தமிழ் இயக்­கங்கள் பேச்­சுக்­களை நடத்­தின, பின்னர் விடு­தலைப் புலிகள் பேசினர்.

கடை­சி­யாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் பேசி­யது.

ஆனாலும், தமி­ழர்­களின் பிரச்­சி­னை­களைத் தீர்க்­கின்ற, அவர்­களின் அர­சியல் அபிலாசை­களைத் தீர்க்­கின்ற, அர­சியல் தீர்வைக் காண முடி­ய­வில்லை.

எந்­த­வொரு சிங்­கள அர­சியல் தலை­மையும், தமிழர் பிரச்­சி­னையைத் தீர்க்­கின்ற அரசியல் தீர்வு ஒன்றைக் காண்­ப­தற்குத் தயா­ராக இருக்­க­வில்லை.

அதுவே தமிழர் தரப்பில் அர­சாங்­கங்­க­ளுடன் பேச்சு நடத்­திய தரப்­பு­களை வெறுப்­ப­டைய செய்­தது. ஆயுதப் போராட்­டங்­களைத் தீவி­ரப்­ப­டுத்தும் உந்­து­தலைக் கொடுத்­தது.

ஆயுதப் போராட்டம் தோற்­க­டிக்­கப்­பட்ட பின்­னரும் கூட, மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கத்­துடன், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பேச்­சுக்­களை நடத்­தி­யது. ஆனாலும், ஒரு பயனும் கிடைக்­க­வில்லை.

தமிழர் பிரச்­சி­னைக்கு பேச்­சுக்­களின் மூலம் அர­சியல் தீர்வு காணும் எல்லா முயற்­சி­களும் தோல்­வியில் முடிந்த வர­லாறே எம்முன் நீண்டு கிடக்­கி­றது.

இப்­ப­டி­யொரு சூழலில் ஆட்சி மாற்­றத்­துக்குப் பின்னர் பத­விக்கு வந்­தி­ருக்கும் மைத்திரிபால சிறி­சேன- – ரணில் விக்­கி­ர­ம­சிங்க கூட்டு அர­சாங்­க­மா­னது, அர­சியல் தீர்வு தொடர்­பான தனி­யான பேச்­சுக்கள் எதை­யுமே தமிழர் தரப்­புடன் இன்று வரை நடத்த­வு­மில்லை. நடத்­து­வ­தற்­கான முயற்­சி­களில் இறங்­க­வு­மில்லை.

இந்த அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்­த­வுடன், 100 நாள் வேலைத் திட்டம் என்று அறி­வித்து, அடுத்த நாடா­ளு­மன்றத் தேர்­த­லுக்­கான தயார்­ப­டுத்­தல்­களில் இறங்­கி­யது.

நாடா­ளு­மன்றத் தேர்தல் வரை தமிழர் பிரச்­சினை பற்றி எதுவும் பேச முடி­யாது, அதற்குப் பின்னர் தான் எல்லாம் என்று கைவி­ரித்­தது. நாடா­ளு­மன்றத் தேர்­தலில் ஆட்­சியைப் பிடித்­து, ஒரு ஆண்­டுக்கு மேலாகி விட்ட நிலை­யிலும், அர­சியல் தீர்வு குறித்துப் பேசு­வ­தற்­கான எந்த முயற்­சி­களும் எடுக்­கப்­ப­ட­வில்லை.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும், அர­சியல் தீர்வு குறித்து அர­சாங்கம் பேச்சு நடத்த முன்­வரவேண்­டு­மென்று கோரிக்கை விடுக்­கவோ, அழுத்­தங்­களைக் கொடுக்­கவோ இல்லை. அர­சாங்­கமும் அது­பற்றிக் கவலை கொள்­ள­வில்லை.

புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­படும் என்ற வெற்று வாக்­கு­று­தியின் அடிப்­ப­டை­யில்தான் எல்­லாமே நடந்து கொண்­டி­ருக்­கி­றது.

இதற்கு முந்­திய அர­சி­ய­ல­மைப்­புகள் தயா­ரிக்­கப்­பட்ட போது, தமி­ழர்­க­ளுடன் கலந்தாலோ­சிக்­கப்­ப­ட­வில்லை, அவர்­களின் யோச­னைகள் உள்­ள­டக்­கப்­ப­ட­வில்லை, ஆனால், புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் விட­யத்தில் தமி­ழர்­களும் உள்ளடக்கப்பட்­டுள்­ளனர், தமி­ழர்­களின் கருத்­துக்­களும், யோச­னை­களும் உள்வாங்கப்படும் என்­ப­தை­யிட்டு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் பர­ம­தி­ருப்தி வெளி­யிட்டு வரு­கிறார்.

அர­சி­ய­ல­மைப்பு ரீதி­யாக தமி­ழர்­களின் உரி­மைகள் உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்­துக்கு இட­மில்லை.

ஆனால், அர­சி­ய­ல­மைப்பு மாற்றம் ஒன்றின் ஊடாக மாத்­தி­ரமே, தமி­ழர்­களின் பிரச்­சி­னைக்கு நிலை­யான அர­சியல் தீர்வு காணப்­பட்டு விடுமா என்­பது கேள்­விக்­கு­ரிய விடயம்.

ஏனென்றால், இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்பின், 13 ஆவது திருத்­தச்­சட்­டத்தில் காணி, பொலிஸ், அதி­கா­ரங்­களை மாகா­ணங்­க­ளுக்கு வழங்­கு­வது பற்றிக் கூறப்­பட்­டி­ருக்­கி­றது.

ஆனால், அந்த அதி­கா­ரங்கள் இன்று வரையில் எந்த மாகா­ண­ச­பைக்கும் வழங்­கப்­ப­ட­வில்லை.

மாகா­ண­ச­பை­க­ளுக்கு அந்த அதி­கா­ரங்­களைப் பெறு­வ­தற்கு எடுக்­கப்­பட்ட முயற்­சி­களும் கைகூ­ட­வில்லை. காரணம், அர­சியல் ரீதி­யாக மாகா­ணங்­க­ளுக்கு அதி­கா­ரங்­களை வழங்கும் விருப்பும் அதற்­கான தற்று­ணிவும் எந்த அர­சாங்­கத்­துக்கும் இருக்­க­வில்லை.

எனவே , அர­சி­ய­ல­மைப்பு ரீதி­யான மாற்றம் என்­பது அவ­சி­ய­மான ஒன்­றா­கவே இருந்தாலும், அது தமி­ழர்­களின் அர­சியல் அபி­லா­சை­களை தீர்க்­கின்ற, தமி­ழர்­க­ளுக்கு அதி­கா­ரங்­களைப் பகிர்ந்து அளிக்­கின்ற ஒன்­றாக இருக்கும் என்று நம்­ப­மு­டி­ய­வில்லை.

தமி­ழர்கள் எதிர்­பார்ப்­பது, சமஷ்டி ஆட்­சி­மு­றையின் அடிப்­ப­டை­யி­லான ஒரு அதிகா­ரப்­ப­கிர்வு முறை­யை­யே­யாகும். அதற்­கா­கவே கடந்த தேர்­தல்­களில் தமிழ் மக்கள் வாக்­க­ளித்­தி­ருக்­கி­றார்கள்.

ஆனாலும், தற்­போ­தைய அர­சாங்­கத்­தி­லுள்ள இரண்டு பிர­தான கட்­சி­க­ளுமே சமஷ்டி முறை­யி­லான அதி­கா­ரப்­ப­கிர்­வுக்குத் தயா­ராக இல்லை என்று அறி­வித்­தி­ருக்­கின்­றன.

புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒற்­றை­யாட்­சியை அடிப்­ப­டை­யாகக் கொண்­ட­தா­கவே இருக்கும் என்று மீண்டும் மீண்டும் ஜனா­தி­ப­தியும், பிர­த­மரும், அமைச்­சர்­களும் உறுதி அளித்து வரு­கின்­றனர்.

தமி­ழர்­களின் அர­சியல் விருப்பு புறக்­க­ணிக்­கப்­பட்டு ஒற்­றை­யாட்சி அர­சி­ய­ல­மைப்பு ஒன்றைத் தயா­ரிக்கும் முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­படும் கட்­டத்தில் அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்தில் பங்­க­ளிக்கும் தமிழர் தரப்பு என்ன செய்யப் போகி­றது?

பெரும்­பான்மை சிங்­கள மக்­களின் எதிர்ப்பை மீறி எந்­த­வொரு அர­சாங்­கமும் தமி­ழ­ருக்­கான நியா­ய­மான தீர்வை வழங்கப் போவ­தில்லை.

அதுவும், சிங்­கள மக்­களின் ஆத­ரவைப் பெரு­ம­ளவில் கொண்­டி­ராத இப்­போ­துள்­ளது போன்ற ஒரு அர­சாங்­கத்­தினால், மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யு­டனும், சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பை நடத்­தியும், தமி­ழர்­களின் உரி­மை­களை உறு­திப்­ப­டுத்தும் அரசியலமைப்பை நிறை­வேற்ற முடி­யாது.

அவ்­வா­றா­ன­தொரு நிலை ஏற்­பட்டால், தமி­ழர்­க­ளுக்கு அதி­கா­ரங்­களை அளிக்கும் விடயங்­களை நீக்­கி­விட்டு, ஒரு அர­சி­ய­ல­மைப்பை நிறை­வேற்­று­வ­தற்கு தற்­போ­தைய அர­சாங்கம் தயா­ரா­கவே இருக்கும்.

தமி­ழர்­களின் பங்­க­ளிப்­புடன், அவர்­களின் யோச­னை­க­ளையும் உள்­வாங்கி தயா­ரிக்­கப்­பட்ட அர­சி­ய­ல­மைப்பு என்ற பெயரும் நிலைத்­தி­ருக்கும்.

ஆனால் தமி­ழ­ருக்­கான அதி­கா­ரங்கள் எதுவும் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­காது. உரி­மைகள் உறுதி செய்­யப்­பட்­டி­ருக்­காது.

இப்­போ­துள்ள அர­சி­ய­ல­மைப்பில் எப்­படி வாழ்ந்­தார்­களோ அது­போ­லவே வாழ்­வ­தற்கு நிர்ப்­பந்­திக்­கப்­ப­டு­வார்கள்.

அப்­ப­டி­யொரு நிலைக்குள் மூழ்­கும்­போது, நாம் வெளியே போகிறோம் என்று தமிழர் தரப்பு வெளி­யே­றி­னாலும், தமி­ழர்­களின் பங்­க­ளிப்­புடன் உரு­வாக்­கப்­பட்ட அரசியலமைப்பு என்ற பெயர் மாத்­திரம் நிலைத்து விடும்.

அத்­த­கை­ய­தொரு கட்­டத்­துக்குச் செல்­வ­தற்கு முன்னர், தமிழர் பிரச்­சி­னை­களைத் தீர்க்கின்ற அர­சியல் தீர்வு ஒன்று குறித்து, சிங்­கள அர­சியல் தலை­மை­க­ளுடன் இணக்கப்­பாட்­டுக்கு வர­வேண்­டி­யது அவ­சியம்.

அவ்­வா­றான ஒரு அர­சியல் இணக்­கப்­பாட்டை உரு­வாக்கும் எந்த முயற்­சி­க­ளிலும் ஈடுப­டாமல் வெறு­மனே அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்தில் மாத்­திரம் கவனம் செலுத்திக் கொண்­டி­ருந்தால், மீண்டும் தமி­ழர்கள் ஏமாற்­றப்­படும் நிலைக்கே கொண்டு செல்லப்படுவார்கள்.

அர­சியல் தீர்­வுக்­கான பேச்­சுக்கள் என்­பது முக்­கி­ய­மா­னது. அதனை விலக்கி, அரசியலமைப்பு மாற்­றத்தை மாத்­திரம் தமிழர் தலை­மைகள் முன்­னி­றுத்த முனைந்தால், தமி­ழர்கள் கோரு­கின்ற உரி­மை­களை அர­சி­ய­ல­மைப்பில் உள்­வாங்க முடி­யாத கட்டம் ஒன்று ஏற்­படும் போது, ஏமாற்­றமே மிஞ்சி நிற்கும்.

அத்­த­கை­ய­தொரு நிலையில் சிங்களத் தலைமைகளுக்கு எந்தப் பாதிப்பும் வந்து விடாது.

அவர்கள் தமக்குத் தேவையானதை, கட்சிகளுக்கிடையிலான பகையை மறந்து ஒன்றுபட்டு நின்று நிறைவேற்றிக் கொள்வார்கள். அங்கே தமிழர்கள் மாத்திரமே நடுத்தெருவில் விடப்படுவார்கள்.

ஒற்றையாட்சிக்குள் தமிழர்களின் பிரச்சினைக்கு எவ்வாறு நிலையான தீர்வு காணப்பட முடியாதோ, அரசியலமைப்பு மாற்றமும், நிலையான தீர்வைத் தருகின்ற ஒன்றாக அமையாது.

ஏற்கனவே சமஷ்டி பற்றி தமிழர்கள் முன்வைத்த எண்ணக்கருவையே, கலாநிதி லால் விஜேநாயக்க போன்ற அரசியலமைப்பு உருவாக்கலில் முக்கிய பங்காற்றும் தரப்பினர் நிராகரித்து விட்ட நிலையில், இதுபோலத் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை நிராகரிப்பது ஒன்றும் சிங்கள அரசியல் தலைமைகளுக்கு பெரிய விடயமே அல்ல.

காலம்காலமாக தமிழர்களை ஏமாற்றியே பிழைப்பு நடத்தி வந்தவர்களே இந்தளவுக்கு விழிப்பாக செயற்படும் நிலையில், காலம் காலமாக ஏமாற்றப்பட்ட தமிழர்கள் எவ்வளவு காலத்துக்குத் தான், ஏமாந்து கொண்டேயிருக்கப் போகிறார்கள்?

– கபில்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஏன் வாரம் ஒருமுறை பாகற்காயை உணவில் சேர்க்க சொல்கிறார்கள் தெரியுமா?..!!
Next post கர்ப்பிணிகளுக்கு இது கட்டாயம் தேவை..!!