மட்டக்களப்பில் 25 வயது இளம் பெண் பெற்றோல் ஊற்றி தீ வைத்து தற்கொலை..!!

Read Time:1 Minute, 22 Second

1461208436-0027வாழைச்சேனை பகுதியில் இளம் யுவதி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாழைச்சேனை துர்க்கை அம்மன் ஆலய வீதியைச் சேர்ந்த அற்புதராஜா பிரசாந்தி (வயது 25) என்ற இளம் யுவதியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

இவர் வீட்டில் எவரும் இல்லாத சந்தர்ப்பத்தில் தனது உடம்பின் மேல் பெற்றோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார்.

இதேவேளை இவரது கூச்சல் சத்தம் கேட்டு அயலவர்கள் வீட்டுக்கு வந்து அவரைக் காப்பாற்றி வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலகமே பெரும்பரபரப்புடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நாளை..!!
Next post மாதவிடாய் காலத்தில் தாங்க முடியாத வலியா? இதோ தீர்வு…!!