சாலை விதிகளை கடைபிடிக்க கூறிய காவலரை தாக்க முயன்ற வாலிபர்..!!

Read Time:1 Minute, 35 Second

daily_news_5766979455948புதுச்சேரியில் போக்குவரத்து காவலரை வாலிபர் ஒருவர் தாக்க முயன்ற வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. புதுச்சேரி நகரத்தின் மையப்பகுதியான 45 அடி ரோடு காமராஜர் சாலை சந்திப்பில் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் வினோத்தை மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் அடிக்க முயன்றார்.

சாலை விதிகளை கடைபிடிக்குமாறு கூறிய காவலர் வினோத்தை மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் அடிக்க முயன்றார். சாலை விதிகளை கடைபிடிக்குமாறு கூறிய காவலரை அடிக்க முயன்ற வாலிபரை அங்கிருந்த சிலர் தங்களது செல்போனில் படம் பிடித்தனர்.

இந்த வீடியோ காட்சி புதுச்சேரி முழுவதும் தற்போது வாட்ஸ்அப்பில் வைரலாக பரவி வருகிறது. இது தொடர்பாக முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ராஜிவ் ரஞ்சன் உத்தரவின் பேரில் பெரியகடை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியின் மூலம் வாலிபர் ஓட்டி வந்த வாக எண்ணை வைத்து அவரை தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தலை முடி கொட்டுவதற்கு இதுவும் ஒரு காரணம்…!!
Next post உலகமே பெரும்பரபரப்புடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நாளை..!!