உங்களுடன் பழகும் பெண் உங்களை காதலிக்கிறாரா? எப்படி தெரிந்து கொள்வது?
பொதுவாக ஆண்கள் அனைவரும் பெண்களோடு சகஜமாக பழகுவார்கள். சகஜமாக பழகும் ஆண்கள், பெண்களின் பழக்கவழக்கங்களை கண்டு அவர்கள் மீது ஈர்ப்பு ஏற்பட்டு அது காதாலாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது.
ஆனால் என்ன இவ்வளவு நாட்கள் சகஜமாக பழகிவிட்டோமே இப்போது சென்று காதல் சொன்னால் அவள் தன்னை தவறாக நினைத்துவிடுவாளே என்று பல ஆண்கள் அஞ்சுகின்றனர்.
இனிமேல் அந்த பயம் வேண்டாம். நீங்கள் காதலை சொல்லாமலே அவர் உங்களை காதலிக்கிறாரா, இல்லையா என்பதை எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
பெண்கள் பெரும்பாலும் மற்றவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்புவது அரிது. அப்படி ஒரு பெண் அடிக்கடி மெசேஜ் அனுப்பி, சாப்பிட்டீர்களா என நலம் விசாரித்தால் அவர் உங்கள் மீது ஒரு வித அன்பு வைத்துள்ளார்.
மெசேஜ்க்கு ஏன் பதிலளிக்கவில்லை என அந்த பெண் கேட்டால், வேறு ஒரு பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்தேன் என கூறிப்பாருங்கள். அதற்கு எதிரில் உள்ள பெண் சோகமடைந்தால் அவர் உங்கள் மேல் காதல் கொண்டுள்ளார் என்பது அர்த்தம். அதுவே சற்று அலட்டிக்கொள்ளாமல் யார் அந்த பெண், அவங்க எப்படின்னு கேட்க ஆரம்பித்தால் அவர் தோழியாக பழகுகிறார் என தெரிந்துகொள்ளலாம்.
பெரும்பாலும் தோழிகள், மற்றவர்கள் பற்றியும், அலுவலகத்தில் நடந்தது குறித்தும் பேசுவார்கள். ஆனால் காதலியோ அதையும் தாண்டி, தன்னை பற்றியும், தனது குடும்பத்தை பற்றியும், தனது வாழ்வில் நடந்த சம்பவங்கள் குறித்து முழுவதுமாக பகிர்ந்துகொள்வார்.
ஒரு பெண் ஒருவரை ஓரிரு நாட்கள் தொடர்பு கொள்ள முடியாவிட்டாலும், அவரை ஏன் தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும், மறு நாள் தொடர்பு கொண்டு அளவுக்கு மீறிய அன்பாக பேசி, ஏன் அந்த நாட்களில் போன் எடுக்கவில்லை என கேள்வி கேட்டு அறிந்து கொள்ள ஆசைப்படுவார். அப்படி அதீத அன்பாக இருப்பவர் காதலிக்கிறார் என்று தான் அர்த்தம்.
மகிழ்ச்சியான தருணங்களில் நண்பர்களிடம் நேரத்தை செலவழிக்காமல், உங்களுடன் செலவிட்டால் அவரின் நட்பு காதலாக மாற வாய்ப்புள்ளது.
நீங்கள் சோகமாக இருந்தால், உங்களை சோகத்திலிருந்து வெளிக்கொண்டுவர அடுத்தடுத்து முயற்சி செய்தால், அவர் உங்கள் மேல் காதலில் விழுந்து விட்டார் என நம்பலாம்.
ஒரு பெண் தன்னை காதலிப்பதாக உணர்ந்தால், அவரிடம் வேண்டுமென்றே அந்த பெண் அழகாக உள்ளார். இந்த பெண் தன்னை கவர முயற்சிக்கிறார் என புருடா விடுங்கள். உடனே கடுப்பாகி கிளம்பினால் அவர் காதலிப்பது உறுதி.
*** இதுபோன்ற “அவ்வப்போது கிளாமர்” செய்திகளை பார்வையிட இங்கே அழுத்தவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating