கருவளையம் வரக் காரணம் என்ன? உங்களுக்கான டிப்ஸ்…!!

Read Time:3 Minute, 45 Second

625-0-560-350-160-300-053-800-668-160-90ஒருவரை பளிச்சென்று காட்டுவது அவர்களின் முகம் தான். மேலும் அந்த முகத்திற்கு வசீகர அழகை கொடுப்பது முகத்தில் இருக்கும் இரண்டு கண்கள்.

ஆனால் ஒருசில பெண்களுக்கு அவர்களின் கண்களைச் சுற்றிலும் கருவளையம் தோன்றும் இது அவர்களின் முகத்தில் இருக்கும் அழகையே கெடுத்து விடும்.

பொதுவாக கண்களில் கருவளையம் ஏற்பட பல்வேறு காரணங்கள் இருக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

கருவளையம் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?

கண்கள் இருக்கும் இடத்தில் தோல் அதிகமாக சுருக்கம் அடைந்து, பின் அந்த சுருக்கமே கருப்பு நிறமாக மாறி, கருவளையத்தை கண்களில் ஏற்படுத்துகிறது.

நமது அன்றாட உணவில் சத்துக்கள் இல்லாத உணவு வகைகளை அதிகமாக சாப்பிடுவதால், கண்களில் கருவளையப் பிரச்சனைகள் உண்டாகிறது.

நாம் அதிக நேரம் கண் விழித்து படித்தல் மற்றும் அதிக நேரம் டி..வி பார்த்தல், இது போன்று கண்களுக்கு அதிக வேலை கொடுக்கும் செயல்களை செய்வதால், நமது கண்களில் கருவளையம் ஏற்படுகிறது.

தினமும் அதிகமாக வீட்டு வேலைகள் செய்வதால், நமது உடம்பு அதிக சோர்வுத் தன்மையை அடைகிறது. இதனால் ரத்தசோகை பாதிப்புகள் ஏற்பட்டு கண்களில் கருவளையங்கள் ஏற்படுகின்றது.
கருவளையத்தை போக்க என்ன செய்ய வேண்டும்?

நமது தோலை வெண்மை அடையச் செய்யும் தாது உப்புகள், புரதம், கொழுப்புச்சத்து ஆகிய சத்துக்களை கொண்ட உணவுப் பொருட்களை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இரும்புச் சத்துக்கள் அதிகம் உள்ள முருங்கைக்கீரை, அகத்திக்கீரை, முள்ளங்கி, சின்ன வெங்காயம், பூண்டு, அவரைக்கீரை, ஆப்பிள், நெல்லிக்காய், விளாம்பழம், நாவல்பழம், கமலா ஆரஞ்சு, வாழைப்பழம், வெள்ளரிப்பழம், பாகற்காய், வாழைத்தண்டு போன்ற உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டும்.

வெற்றிலை போடும் போது பயன்படுத்தும் சுண்ணாம்பை சிறிதளவு எடுத்துக் கொண்டு அதை ஒரு கப் குளிர்ந்த நீரில் கரைத்து ஒரு மணி நேரம் வைக்க வேண்டும். பின் தெளிந்த சுண்ணாம்பு நீருடன் சமஅளவு எலுமிச்சை சாறு எடுத்து ஒன்றாக கலந்து கருவளையம் இருக்கும் இடங்களில் விழிகளில் படாமல் போட்டு கழுவ வேண்டும்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மகளிர் பக்கம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ராஜமௌலியின் அண்ணனும் இயக்குனர் ஆகிறார்…!!
Next post ஒரே மேடையில் சம்பந்தனும், விக்னேஸ்வரனும்…!!