மன்னார் கடலில் கடற்­ப­டை­யி­னரின் கெடு­பி­டி : மீன­வர்­கள் பாதிப்பு…!!

Read Time:4 Minute, 6 Second

d0055fffமன்னார் நகர் பாலத்­த­டி­யி­லி­ருந்து தென் கடல் பரப்­புக்கு பட­கு­களின் மூலம் மீன்­பி­டிக்கச் சென்ற மீன­வர்­களை நேற்று கடலில் வைத்து கடற்­ப­டை­யினர் திருப்­பி­ய­னுப்­பி­யதால் சில மணிநேரம் இப்­ப­கு­தியில் அல்­லோலகல்­லோல நிலைமை ஏற்­பட்­டது.

இப்­பி­ரச்­சினை குறித்து விட­ய­ம­றிந்த மன்னார் மறை­மா­வட்ட குரு முதல்வர் அருட்­பணி அந்­தோனி விக்ரர் சோசை அடி­களார், வன்னி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சாள்ஸ் நிர்­ம­ல­நாதன், மன்னார் கடற்­தொழில் திணைக்­கள உதவிப் பணிப்பாளர் பி.சகா­ய­நாதன் மிராண்டா, மன்னார் பங்­குத்­தந்தை பெப்பி சோசை அடி­களார் ஆகியோர் இணைந்து மேற்­கொண்ட நட­வ­டிக்­கையால் நிலைமை சுமுக நிலைமைக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது.

இச் சம்­ப­வம் ­பற்றி தெரிய வரு­வ­தா­வது,

நேற்று வெள்­ளிக்­கி­ழமை மன்னார் நகரப் பகு­தி­யான பாலத்­தடி கடற்­க­ரை­யி­லி­ருந்து இரு­நூ­றுக்கு மேற்­பட்ட பட­கு­களில் பள்­ளி­முனை, பனங்­கட்­டு­கொட்டு, உப்­புக்­குளம், பெரி­ய­கடை மீன­வர்கள் வழ­மை­போன்று தென் கடல் பரப்­புக்கு மீன்­பி­டிக்­காக சென்­ற­போது அப்­ப­கு­தியில் கடற்­க­ரை­யோர கடற்­ப­டை­யினர் இம் மீன­வர்­களை எவ்­வித தடையும் விதிக்­காத நிலையில் மீன்­பி­டிக்க அனு­ம­தித்­துள்­ளனர்.

ஆனால் இம் மீன­வர்கள் கடலில் சென்று கொண்­டி­ருந்­த­பொ­ழுது கடற்­ப­டை­யினர் இவர்­க­ளிடம் தொழில் அனு­மதிப் பத்­தி­ரங்­களை பரி­சோ­தித்­த­துடன் அவை­களை காண்­பித்­த­போதும் வேறு பல கார­ணங்­களை கூறி தொழி­லுக்கு விடாது அனை­வ­ரையும் மீண்டும் கரைக்கு திருப்­பி­யுள்­ளனர்.

இதனால் ஐநூ­றுக்கு மேற்­பட்ட மீனவர் கள் தொழி­லுக்கு செல்ல முடி­யாது மீண் டும் கரை வந்து சேர்ந்­தனர். இதனால் அப்­ப­கு­தியில் அமை­தி­யின்மை ஏற்­பட்­டது.

இச் சம்­பவம் அறிந்து அப்­ப­கு­திக்கு விரைந்து வந்த வன்னி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சார்ள்ஸ் நிர்­ம­ல­நாதன், மன்னார் பேரா­லய பங்குத்தந்தை அருட்­பணி பெப்பி சோசை அடி­களார், மன்னார் கடற்­தொழில் திணைக்­கள உதவிப் பணிப்­பாளர் பி.எஸ்.மிராண்டா, வடமாகாண சபை உறுப்­பினர் குண­சீலன் ஆகியோர் மீன­வர்­களை அமை­திப்­ப­டுத்­தி­ய­துடன் மன்னார் மறை மாவட்ட குரு முதல்வர் அருட்­பணி அ.விக்ரர் சோசை அடி­களார் சகிதம் வந்த சனி வில்லேஷ் கடற்­படை அதி­காரி கே.எஸ்.திஸ­ாநா­யக்க ஆகி­யோ­ருடன் இப் பிரச்­சினை சம்­பந்­த­மாக கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. இதில் மன்னார் பொலிஸ் அத்­தி­யட்­சகர் ஜி.எம்.சோம­ரட்ன, உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் எஸ்.யூ.ஐய­சே­கர ஆகி­யோரும் சமுகமளித்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து மீனவர்கள் கடலுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டபோதும் இன் றைய கால சூழ்நிலைக்கு அமைய குறிப் பிட்ட நேரம் தாழ்த்தி மீன்பிடிக்கச் செல்வ தால் பிரயோசனம் இல்லையென மீனவர் கள் கடலுக்குச் செல்லவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ; இன்றும் நாளையும் மழை…!!
Next post 80 வயது தாயை புறக்கணித்த ஏழு பிள்ளைகளின் கொடூர செயல்…!!