திருமணம் செய்வதாக கூறி யுவதியை ஏமாற்றிய போலி மருத்துவர் கைது…!!

Read Time:2 Minute, 16 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90மணமகள் தேவை என்று பத்திரிகையில் விளம்பரப்படுத்தி யுவதி ஒருவரை ஏமாற்றிய போலி மருத்துவரை பொரளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த நபர் தான் நரம்பியல் மருத்துவர் எனக் கூறி கண்டியில் அரச நிறுவனம் ஒன்றில் பணிப்புரிந்து வரும் யுவதியை ஏமாற்றியுள்ளார்.

குறிந்த சந்தேக நபர் தென் மாகாணத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நபர் தன்னை மருத்துவராக காட்டிக்கொண்டு யுவதியின் பெற்றோருடன் பேசி தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் யுவதியை பெண் பார்க்க கார் ஒன்றில் யுவதியின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

வாடகை காரில் சென்றுள்ள இந்த நபர், அதன் சாரதியிடம் தன்னை டொக்டர் என அடிக்கடி அழைக்குமாறு கூறியுள்ளார்.

குறித்த நபரின் பெயரில் தென் பகுதியில் ஒரு மருத்துவர் இருப்பதால், யுவதியும் அவரது பெற்றோரும் இந்த நபரிடம் ஏமாந்துள்ளனர்.

சந்தேக நபர் யுவதியை சந்திக்க கண்டிக்கு சென்றிருந்த வேளையில் ஒரு லட்சம் ரூபாவுக்கும் மேற்பட்ட தொகையை யுவதியிடம் இருந்து ஏமாற்றி பெற்றுள்ளார்.

சந்தேக நபர் போலி மருத்துவர் என்பதை அறிந்து கொண்ட யுவதி, அந்த நபருடன் தொடர்புகளை துண்டித்ததால், கோபமடைந்த நபர் 10 இலட்சம் ரூபா பணத்தை கேட்டு யுவதியை அச்சுறுத்தியுள்ளார்.

யுவதி இது சம்பந்தமாக பொரள்ளை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய சந்தேக நபர் பொரள்ளை பிரதேசத்திற்கு வந்த நேரத்தில், பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சினிமாவில் ஒழுக்கமாக இருந்தால் கிசுகிசுக்கள் வராது: தமன்னா…!!
Next post விண்வெளியில் அணுகுண்டு பரிசோதனை நடத்தும் பரபரப்பான காட்சி…!! வீடியோ