வாசலைன்தீக்குச்சியுடன் பெண் பயணி தகராறு: அவசரமாய் தரையிறங்கிய அமெரிக்க விமானம்

Read Time:1 Minute, 51 Second

ua.jpgலண்டனில் இருந்து வாஷிங்டன் வந்து கொண்டிருந்த யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவன விமானத்தில் ஒரு பெண் பயணி முரட்டுத்தனமாக நடந்து கொண்டதால் அந்த விமானம் அவசரமாக பாஸ்டன் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
182 பயணிகள், 12 பணியாட்களுடன் அந்த விமானம் லண்டனில் இருந்து வந்து கொண்டிருந்தபோது ஒரு பெண் பயணி விமான சிப்பந்திகளுடன் தகராறு செய்தார். அவரை அமைதிப்படுத்த சிப்பந்திகளும் சக பயணிகளும் எவ்வளவோ முயன்றும் முடியவில்லை.

அவரிடம் ஒரு ஸ்குரூ டிரைவரும், வாசலைன் பாட்டில்களும் இருந்தன. இதையடுத்து அந்த விமானம் அவசரமாக பாஸ்டன் விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டு அங்கு தரையிறக்கப்பட்டது.

அந்தப் பெண் பயணி தீவிரவாதியாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததால் அந்த விமானம் தரையிறக்கப்பட்டபோது அதை போர் விமானங்கள் சூழ்ந்து கொண்டன.

அந்தப் பெண்ணிடம் வாசலைன், ஸ்குரூ டிரைவர் தவிர தீக்குச்சி மற்றும் அல்கொய்தா தொடர்பான சில வாசகங்கள் அடங்கிய துண்டுச் சீட்டுகளும் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

அந்தப் பெண்ணுக்கு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உண்டா என்பது தெரியவில்லை. ஆனாலும் பாதுகாப்பு கருதி அந்த விமானம் தரையிறக்கப்பட்டது.

ua.jpg

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post எங்கள்மீது தாக்கும்போதே திருப்பித் தாக்குகிறோம்- ஜனாதிபதி
Next post லண்டன் விமான தகர்ப்பு சதி: அல்கொய்தாவின் ‘நம்பர் 3’ தீட்டிய திட்டம்!