மலையகத்தில் மீண்டும் ஆர்ப்பாட்டம் : தொழிலாளர்களுக்கு பாரிய ஏமாற்றம்…!!

Read Time:2 Minute, 48 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90அக்கரப்பத்தனை பெல்மோரல் தோட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தி உள்ளார்கள்.

பெல்மோரல் தோட்டத்தில் உள்ள கொழுந்து மடுவத்திற்கு முன்னால் இன்று காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டம் சுமார் 2 மணித்தியாலயங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

தோட்டநிர்வாகம் தொழிலாளர்கள் பறிக்கும் கொழுந்திற்கு அரை நாள் சம்பள வீதம் வழங்கியுள்ளது.

கடந்த காலங்களில் 18 கிலோவிற்கு குறைவாக கொழுந்து பறித்த போது முழு நாள் சம்பவம் வழங்கியதாகவும், கூட்டு ஒப்பந்தம் முடிந்த பின்பு குறைந்தது கிலோ கொழுந்து பறிக்கும் போது முழு நாள் சம்பளம் வழங்க முடியாது என நிர்வாகம் அறிவித்ததையடுத்து இத்தோட்ட தொழிலாளர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்ததாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை கடந்த காலங்களில் ஒவ்வொரு நாளும் 4.30 மணியளவில் தங்களின் தொழிலை முடித்து வீடு திரும்பியதாகவும், தற்போது 5 மணி வரை கட்டாயம் தொழில் செய்ய வேண்டும் என தோட்ட நிர்வாகம் வழியுறுத்துவதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கூட்டு ஒப்பந்தத்தை கைச்சாத்திட்ட போதிலும் இதுவரை சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்கள் கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் தமக்கு விளக்கம் கொடுக்கவில்லை எனவும் இவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்தோடு 5 மணி வரை தொழில் செய்யும் பொழுது தமது பிள்ளைகளை பராமரிக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு முன்பு நிலுவை சம்பளத்தை பெற்றுத் தருவதாக கூறிய தொழிற்சங்கம் தமக்கு ஏமாற்றத்தை தந்ததாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இனி இளைஞர்களுக்கு முச்சக்கர வண்டி அனுமதிப்பத்திரம் இல்லை…!!
Next post குளவிக் கொட்டுக்கு இலக்காகி 21 பேர் வைத்தியசாலையில் அனுமதி…!!