ருசியான கிரில்டு சிக்கன்…ஆனால் ஆபத்துகள் அதிகம்! இத படிங்க முதல்ல…!!

Read Time:3 Minute, 56 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-1இன்றைய நவீன உலகில் துரித உணவுகளை நோக்கி மக்கள் படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சத்துக்கள் ஏதும் தராத சுவைக்காக அதனை ஆசைப்பட்டு சாப்பிட்டுவிட்டு, பின்னர் இளம் வயதிலேயே மாரடைப்பு, புற்றுநோய் போன்ற நோய்களுக்கு ஆளாகின்றனர்.

அதில் ஒன்றான கிரில்டு உணவுகள் பற்றி பார்ப்போம்.

இறைச்சியில் மசாலா தடவி, ஒருநாள் முழுவதும் அல்லது குறைந்தது ஆறு மணி நேரமாவது ஊறவைக்கின்றனர்.

இதனுடன் சாஸ், பதப்படுத்திகள், சுவையூட்டிகள் போன்ற அனைத்தையும் கலந்து, கிரில்டு பாக்ஸ் அல்லது தந்தூரி அடுப்பில் வேகவைக்கின்றனர்.

தீயில் 20 நிமிடங்களாவது சுட்டுஎடுக்கின்றனர். இறைச்சியை மட்டும் தீயில் சுட்டால், மோசமான விளைவுகள் அதிகம் இருக்காது.

இறைச்சியுடன் எண்ணெய், மசாலா பொருட்கள், சுவை மற்றும் நிறத்துக்காகச் சேர்க்கப்படும் ரசாயனங்கள் நெருப்பில் வாட்டப்படும்போது, பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

இதில் பயன்படுத்தப்படும் இறைச்சிகள் தரமானவையா என்று பார்த்தால் நிச்சயம் கிடையாது.

ஏனெனில், மீதிய இறைச்சியை இறைச்சியை ஃப்ரீஸரில் வைத்துப் பயன்படுத்துகின்றனர்.

பிரஷ்ஷான இறைச்சியை வாங்கிச் சமைக்கும்போது பாதிப்பு இல்லை.

ஆனால், முறையாகப் பதப்படுத்தப்படாத இறைச்சிகளால் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

அசைவ ஹொட்டல்களில் 10, 15 முழுக் கோழிகள் கம்பியில் குத்தப்பட்டு கிரில் பாக்ஸில் சுழன்றுகொண்டே இருக்கின்றன.

தவிர, மசாலாக்கள் தடவப்பட்ட நிலையில் இன்னும் நிறையக் கோழிகள், உள்ளே ஃப்ரீஸரில் வைக்கப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் ஒரே நாளில் தீர்ந்துவிடுவது இல்லை.

உடலுக்குக் கேடு விளைவிக்கும் செயற்கை உப்பு மற்றும் நிறங்கள், சுவையூட்டிகள் சேர்க்கப்படுகின்றன. இதைச் சாப்பிடுவதால், முதலில் அல்சர் வரும்.

ரசாயனங்கள் கலக்கப்பட்டு பழைய இறைச்சியை சாப்பிடும்போது வயிறு தொடர்பான புற்றுநோயாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. எப்போதேனும் ஓரிரு முறை சாப்பிட்டால், பிரச்னை இல்லை.

தொடர்ந்து ஆண்டுக்கணக்காக சாப்பிடும் பழக்கம் இருந்தால், அவர்களுக்குப் புற்றுநோய் வரலாம். இதயம், இதயக் குழாய்களில் அடைப்பு ஏற்படலாம்.

வயிற்றுப்போக்கு, ஒற்றைத் தலைவலி, வயிற்றுவலி மற்றும் எரிச்சல், புற்றுநோய் செல்கள் அதிகமாதல் போன்ற பிரச்சனைகள் உருவாகும்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… https://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கதாநாயகி வாய்ப்பு கிடைக்காதது குறித்து வருத்தமில்லை: நடிகை இனியா…!!
Next post பிரித்தானிய பிரதியமைச்சர் இலங்கை வருகிறார்…!!