கிடாரியைத் தொடர்ந்து வெள்ளையத் தேவனாக மாறிய சசிகுமார்…!!

Read Time:1 Minute, 38 Second

201611021717375541_sasi-kumar-next-movie-title-revealed_secvpfநடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகங்களைக் கொண்ட சசிகுமார் சமீபகாலமாக நடிப்பில் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான கிடாரி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து அறிமுக இயக்குனர் பிரகாஷ் இயக்கும் புதிய படமொன்றில் சசிகுமார் நடித்து வருகிறார். இதில் முக்கிய வேடங்களில் கோவை சரளா, தயாரிப்பாளர் சங்கிலி முருகன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.செப்டம்பர் 21-ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இந்நிலையில் இதுவரை பெயரிடப்படாமல் இருந்த இப்படத்துக்கு தற்போது ‘பலே வெள்ளையத்தேவா’ என பெயர் வைத்திருக்கிறார்கள்.

இதுகுறித்து சசிகுமார் தனது டுவிட்டர் பக்கத்தில் “பலே வெள்ளையத்தேவா”எங்களது கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் 9-வதாக தயாரிக்கும் படத்தின் தலைப்பு” என்று தெரிவித்திருக்கிறார். படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்ட போதிலும், கதாநாயகி குறித்த விவரங்களை படக்குழு இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொம்மை பூனையை பார்த்து கிறுக்கு பிடித்த நிஜ பூனை! (வீடியோ)
Next post மாணவர்கள் படுகொலை; நீதிக்கான அடைவு எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும்? கட்டுரை