காதலித்துவிட்டு இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்த என்ஜினீயர் கைது…!!

Read Time:1 Minute, 41 Second

201611021516233107_engineer-arrested-refused-to-marry-the-young-woman_secvpfதாம்பரம் காமராஜபுரம் டெல்லஸ் அவென்யூவில் வசித்து வருபவர் மனீஷ். என்ஜினீயர். கேரளாவை சேர்ந்த இவர் சோழிங்கநல்லூரில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

மனீ‌ஷக்கும், சூளைமேடு திருவேங்கடபுரம் சாலையில் உள்ள விடுதியில் தங்கி பணிக்கு சென்று வந்த கேரளாவை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இருவரும் கேரளாவில் ஒரே பள்ளியில் படித்தவர் என்பதால் நெருங்கி பழகினர். பின்னர் இது காதலாக மாறியது.

இந்த நிலையில் காதலர்கள் இருவரும் கணவன் மனைவி என்று கூறி தேனாம் பேட்டையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தனர்.

சில நாட்களாக மனீஷ் வீட்டிற்கு வராமல் இருந்தார் . மேலும் காதலியிடமும் பேசவில்லை. திருமணம் செய்யவும் மறுத்தார்.

சந்தேகம் அடைந்த இளம்பெண் விசாரித்த போது மனீசுக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் வருகிற 13-ந் தேதி திருமணம் நடைபெற இருப்பது தெரிந்தது.

ஏமாற்றபட்டதை உணர்ந்த இளம்பெண் இது பற்றி தேனாம்பேட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து மனீசை கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒவ்வொரு 4.5 நாளுக்கும் ஒரு பத்திரிக்கையாளர் கொல்லப்படுகிறார்கள்: யுனெஸ்கோ அதிர்ச்சி தகவல்…!!
Next post சக்கப் போடு போடு ராஜா: சந்தானத்துடன் கைகோர்த்த விவேக்…!!