கொழும்பு நகரின் பெரும் துயரம்…! கண்டுகொள்ளாத அதிகாரிகள்…!!

Read Time:2 Minute, 35 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-1கொழும்பு இலங்கையின் தலைநகரம். உயர்ந்த கட்டிடம், அழகிய கடற்கரை, இயற்கை என பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளதன் காரணமாக அதிகளவான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

அதுமட்டுமல்லாது, நாட்டின் பொருளாதார கேந்திர நிலையமாகவும் கொழும்பு காணப்படுகின்றது. இதன் காரணமாக எந்நேரமும் கொழும்பு பரபரப்பாக காணப்படுகின்றது.

இந்நிலையில், கொழும்பு நகரை அபிவிருத்து செய்யும் நோக்கில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக போக்குவரத்து உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி செய்யப்படுகின்றது.

எனினும், கொழும்பில் குறிப்பிட்ட சில பகுதிகளின் நிலை இவ்வாறான அபிவிருத்தி நடவடிக்கைகளை கேள்விக்குறியாக்கும் வகையில் காணப்படுகின்றது.

குறிப்பாக அதிகளவான மக்கள் நடமாட்டம் உள்ள பகுதி ஒன்றின் வீதியின் இன்றைய நிலை இந்த அபிவிருத்தி நடவடிக்கைகளை நிச்சயமாக கேள்விக்குறியாக்கியுள்ளது என்றே கூறவேண்டும்.

ஆம் கொழும்பு நகரின் மத்தியில் அமைந்துள்ள கதிரேசன் வீதியானது இன்று வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலையில் காணப்படுவதனை அவதானிக்க முடிகின்றது.

அபிவிருத்தி பணிகளுக்காக குறித்த வீதியில் குழிகள் வெட்டப்பட்ட நிலையில் பின்னர் அது கைவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த வீதியானது இன்று குன்றும் குழியுமாக காணப்படுகிறது.

தற்போது நாட்டில் சீரற்ற காலநிலை நிலவுவதன் காரணமாக, குறித்த வீதியானது சேறும் சகதியுமாக மாறி, கொழும்பு நகரின் துயரமாக மாறியுள்ளது.

எனவே, இதனை உரிய தரப்பினர் கவனத்தில் எடுத்து குறித்த வீதியினை விரைவில் புனரமைக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புலம்பெயர்ந்தவர்கள் பயணித்த படகு விபத்து…! 18 பேர் பரிதாபமாக பலி….!!
Next post ஒவ்வொரு 4.5 நாளுக்கும் ஒரு பத்திரிக்கையாளர் கொல்லப்படுகிறார்கள்: யுனெஸ்கோ அதிர்ச்சி தகவல்…!!